• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-02 20:16:14    
மீட்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட தேசிய மக்கள் பேரவை

cri

1979ம் ஆண்டு முதல் சீனாவின் பல்வேறு நிலை தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறை மீட்கப்பட்டு படிப்படியாக முழுமையாகியுள்ளது. தேசிய மக்கள் பேரவை தொடர்பான பணிகள் ஒழுங்காக செயல்பட துவங்கின. 1979ம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் சீனாவின் 5வது தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் நடைபெற்ற போது 1978ம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1982ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 5வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத் தொடரில் நடப்பு அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சட்டத்தில் தேசிய மக்கள் பேரவை மற்றும் அதன் நிரந்தர கமிட்டியின் கட்டுமானத்தை வலுப்படுத்துவது தவிர, தேசிய மக்கள் பேரவை என்ற அமைப்பு முறையை முழுமைபடுத்துவது மற்றும் வளர்ச்சியடைய செய்வது பற்றி பல புதிய விதிகள் அதிகரிக்கப்பட்டன.

இவற்றில் நாட்டின் அரசுத் தலைவர் பதவி நிறுவுதல் மீட்கப்பட்டது. நிர்வாக வாரியங்களின் பணித் திறனை அதிகரிக்கும் வகையில் அரசவை மற்றும் இதன் தலைமையின் கீழுள்ள பல்வேறு அமைச்சகங்கள், ஆணையகங்கள் மற்றும் உள்ளூர்களின் பல்வேறு மக்கள் அரசாங்கங்களில் பொறுப்பு அமைப்பு முறை நிறுவப்பட வேண்டும். நாட்டில் மத்திய இராணுவ ஆணையம் நிறுவப்பட வேண்டும். தேசத்தின் ஆயுத சக்திகள் இவ்வாணையத்தின் தலைமையில் குவிக்கப்படும். பரிசோதனை வாரியம் அரசவையில் கூடுதலாக நிறுவப்பட வேண்டும். சட்டத்தின் படி பரிசோதனை மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த வாரியம் பொறுப்பேற்கும். நிதி நிர்வாகம் மற்றும் நடவடிக்கைகளுக்கான கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில் மாவட்ட நிலைக்கு மேற்பட்ட பல்வேறு உள்ளூர் நிலை மக்கள் அரசாங்கங்களில் அவற்றுக்கு ஏற்ற பரிசோதனை வாரியம் நிறுவப்பட்டது. நடுவண் மற்றும் உள்ளூர் என்ற ஆக்கப்பூர்வமான கோட்பாட்டுக்கு இணங்க, நடுவண் அரசின் ஒட்டுமொத்த் தலைமையின் கீழ், பல்வேறு உள்ளூர் நிலை அதிகாரக் கட்டுமானம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் கடப்பாட்டு அதிகாரமும் தேசிய தன்னாட்சிப் பிரதேசங்களின் சுயாட்சி அதிகாரமும் விரிவாக்கப்பட்டுள்ளன. அரசுத் தலைவர், துணை அரசுத் தலைவர்கள், தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டித் தலைவர், துணைத் தலைவர்கள், தலைமை அமைச்சர், துணை தலைமை அமைச்சர்கள், அரசவை உறுப்பினர்கள், அதியுயர் மக்கள் நீதி மன்ற தலைவர், அதியுயர் மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றத்தின் தலைமை வழக்கரைஞர் ஆகியோரின் பதவி காலம் பத்து ஆண்டுகளை தாண்ட கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைமை பதவி ஆயுள்காலம் முழுவதும் என்ற அமைப்பு முறைமை உண்மையில் நீக்கப்பட்டது.