• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-02 14:27:36    
நவீனமயமான புதிய சூ சோ

cri

சூ சோ, வாழ்க்கை மந்தமான, பண்டைய பாணிமிக்க நகரமாக இருப்பது மட்டுமல்ல. நவீன சிறப்புகளையும் கொண்டுள்ளது.

சூ சோவின் யுவான்ரொங் சதுக்கத்தில், உலகளவில் முதலாவது வான் திரை என்பதாக அழைக்கப்பட்ட விளக்குப் பாதை குறிப்பிடத்தக்கது. 500 மீட்டர் நீளமான, 32 மீட்டர் அகலமான இவ்விளக்கு பாதையில், 2 கோடிக்கு அதிகமான LED அதாவது ஒளி உமிழ் விளக்குகள் உள்ளன. மென்மேலும் அதிகமான பயணியர், யுவான்ரொங் சதுக்கத்துக்குச் சென்றடைவது, இந்த விளக்குப் பாதையைப் பார்த்து ரசிப்பதற்காகும். அமெரிக்க பயணி Rico Harrison கூறியதாவது:

நம்ப முடியவில்லை. இது எமது மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது. எனக்கு இது மிகவும் பிடித்து போய்விட்டது.
மற்றொரு அமெரிக்கப் பயணி Shawn James பேசுகையில், முன்னதாக, தான் வேறு இடங்களில் LED விளக்குகளால் உருவாக்கப்பட்ட வான் திரைகளைப் பார்த்துள்ள போதிலும், சூ சோவின் இந்த விளக்குப் பாதையைப் பார்த்து, மிகவும் குலுகலம் அடைந்ததாக தெரிவித்தார்.

இந்த விளக்குப் பாதையின் உள்ளடக்கம் மேலும் சிறப்பானது. சூ சோ நகரம் பற்றிய கதைகளை இது விளக்கிக்கூறி, உள்ளூர் தனிச்சிறப்பியல்புகளை எடுத்துக்காட்டுகிறது. எனவே, மிகவும் அழகாக அமைகிறது என்று Shawn James கூறினார்.
அன்பு நேயர்களே, பெய்ஜிங்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, பறவைக் கூடு என்னும் சீனத் தேசிய விளையாட்டு அரங்கைப் பார்வையிட்டீர்களா? சூசோ நகரத்தின் அறிவியல் தொழில் நுட்ப பண்பாட்டு கலை மையம், சிறிய பறவை கூடு என்பதாக அழைக்கப்படுகிறது. இக்கட்டிடம், உருக்கு கட்டமைப்பை, அடிப்படை வடிவமைப்பு கருத்தாக கொண்டு கட்டியமைக்கப்பட்டது. சில விபரங்களில், வடிவமைப்பாளர், சூ சோ தோட்டத்தின் பாணியை ஏராளமாக இணைத்து சேர்த்தார்.

இதனால், இந்தச் சிறு பறவைக் கூடு, நவீன மற்றும் பண்டைய பாணிகளை ஒரே காலத்தில் கொண்டு சிறப்பு பெற்றுள்ளது.
சூசோ அறிவியல் தொழில் நுட்ப பண்பாட்டு கலை மையம், அழகான தோற்றத்தைக் கொண்டது மட்டுமல்ல, செயல்திறனும் மிக்கது. இதில், மிக முன்னேறிய வசதிகளைக் கொண்ட பெரிய நாடக அரங்கம், 500 விருந்தினர்களை ஒரே நேரத்தில் வரவேற்று உபசரிக்கும் உணவகம், திரையரங்கம், அறிவியல் தொழில் நுட்ப கண்காட்சி அகம், வணிக மையம் ஆகியவை இருக்கின்றன. இம்மையம், சுற்றுலா, பண்பாடு மற்றும் வணிக செயல்திறனைக் கொள்ளும் ஒட்டுமொத்த கட்டிடமாகும்.

சூசோவின் பண்டைய நகரத்தில், அறிவியல் தொழில் நுட்ப பண்பாட்டு கலை மையத்தைப் போன்று, புதிதாய் தோன்றும் சூசோவின் தனிச்சிறப்பான பழையப் பாணியுடைய புதிய கட்டிடம் காணப்படலாம். அது தான், சூசோவின் புதிய அருங்காட்சியகம். உலகில் மிகவும் புகழ்பெற்ற கட்டிட கலைஞர் மாஸ்டார் பெ யூ மிங், இதை வடிவமைத்தார். தொண்மை வாய்ந்த தோட்ட முறையான இக்கட்டிடத்தில், மூங்கில், தாவர மரங்கள் அதிகமாக நடப்பட்டுள்ளன.