• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-03 09:22:32    
2009 உலக கால்பந்து சம்மேளனத்தின் கூட்டமைப்பு கோப்பை

cri
29ம் நாள் நடைபெற்ற 2009 உலக கால்பந்து சம்மேளனத்தின் கூட்டமைப்பு கோப்பையின் இறுதிப்போட்டியில், பிரேசில் அணி, 3-2 என்ற கோல்கணக்கில் அமெரிக்க அணியை தோற்கடித்து, தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

26ம் நாள் ஸ்விட்சர்லாந்தில், புதிய உலக மகளிர் கால்பந்து தரவரிசை பட்டியலை உலக கால்பந்து சம்மேளனம் வெளியிட்டது. சீன மகளிர் கால்பந்து அணி தொடர்ந்து 12வது இடத்தில் உள்ளது. அமெரிக்க அணி, முதலிடம் வகிக்கின்றது.
அடுத்த பிப்ரவரி திங்களில் 2010ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கும் செய்தியை கனடா தலைமை ஆளுநர் மிஷேல் ஜென் அம்மையார், அறிவிப்பார். இது குறித்து தாம் பெருமை கொள்வதாக 27ம் நாள் அவர் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இக்குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஆயத்தம் செய்வதற்கு, கனடா அரசு முயற்சி, ஒற்றுமை, பெருமளவு ஆர்வம் ஆகியவற்றுடன் செயல்பட்டது. சிறந்த விளையாட்டுச் சாதனையையும் ஒத்துழைப்பு எழுச்சியையும் கொண்ட கொண்டாட்ட நடவடிக்கையாக இக்குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மாற வேண்டும் என்று ஜென் விருப்பம் தெரிவித்தார். இவ்விளையாட்டுப் போட்டியில் தம்மால் இயன்ற பங்காற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
பெய்ஜிங் நேரப்படி 28ம் நாள் விடியற்காலை, 2009ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஒரு மகளிர் ஒற்றையர் போட்டியில் சீன வீராங்கனை லீ நாவும், போலந்து வீராங்கனை ராட்வன்ஸ்காவும் மோதினர். இதில் 0-2 என்ற ஆட்டக்கணக்கில் தோல்வியடைந்ததால் லீ நாவால் போட்டியின் இறுதி 16 பேரில் ஒருவராக மாற இயலவில்லை.

உள்ளூர் நேரப்படி 27ம் நாள் சர்வதேச கால்பந்து சம்மேளனம் தனது இணைய தளத்தின் மூலம், 2009 உலக கால்பந்து சம்மேளனத்தின் கூட்டமைப்பு கோப்பையின் மிகச் சிறந்த வீரர்களுக்கான பெயர் பட்டியலை வெளியிட்டது. காகா உள்ளிட்ட 3 பிரேசில் வீரர்கள், பெர்னானதோ டோரெஸ் உள்ளிட்ட 3 ஸ்பெயின் வீரர்கள், தென் ஆப்பிரிக்க வீரர் இருவர், அமெரிக்க வீரர் இருவர் ஆகியோர், இப்பெயர் பட்டியலில் அடங்குகின்றனர்.
2009ம் ஆண்டு மலேசிய பூப்பந்து போட்டி 28ம் நாள் முடிவடைந்தது. இறுதி நாளான 28ம் நாளன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியில், சீன வீராங்கனை வாங் யீ சியன், 2-1 என்ற ஆட்டக்கணக்கில், தனது சக அணிதோழி வாங் சிங்கை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார்.