2009 உலக ஆடவர் வாலிபால் தொடர்போட்டி
cri
2009ம் ஆண்டு உலக ஆடவர் வாலிபால் தொடர்போட்டியின் ஏ குழுவின் 3வது சுற்றுப் போட்டி பெய்ஜிங் நேரப்படி 27ம் நாள் அமெரிக்க சான் ஹோசே நகரில் நடைபெற்றது. சீன அணி, 0-3 என்ற ஆட்டக்கணக்கில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியனான அமெரிக்க அணியிடம் தோல்வியடைந்தது.
 29ம் நாள் சீன அணியும், அமெரிக்க அணியும் ஏ குழுவின் 3வது சுற்றுப் போட்டியின் 2வது போட்டியில் விளையாடும். 2 நாள் நீடித்த முதல் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியின் தீப தொடரோட்டி நடவடிக்கை, 28ம் நாள் சிங்கபூரில் துவங்கியது. இத்தீபம், சிங்கபூரின் 5 குடியிருப்புப் பகுதி வளர்ச்சி செயற்குழுக்கள் மற்றும் 45 பள்ளிகளை கடந்து சென்றது. ஆசிய இளைஞரின் விளையாட்டுப் போட்டிக்கான ஆர்வத்தை வளர்பது, நடப்பு விளையாட்டுப் போட்டியின் தலைப்பாகும்.
 முதல் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்கின்ற சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழு, 28ம் நாள் விளையாட்டு வீரர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழாவை நடத்தியது. சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவின் தலைவர் சு தா லின், பிரதிநிதிக் குழுவின் அதிகாரிகள், தடகள, நீர் குதிப்பு, துப்பாக்கிச்சுடுதல், கால்பந்து, வள்ள ஓட்டப் பந்தயம் ஆகிய விளையாட்டு அணிகளின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தலைமை தாங்கி, இவ்விழாவில் கலந்துகொள்கின்றார். முதல் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி, ஜுன் 29 முதல் ஜுலை 7ம் நாள் வரை, சிங்கபூரில் நடைபெறுகின்றது. ஆசியாவின் 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இதில் கலந்துகொள்கின்றனர்.
 சீனாவின் ஆடவர் கூடைப்பந்து அணியின் புதிய தலைமைப்பயிற்சியாளர் கோ சீ ச்சியாங் தலைமையிலான சீன அணி, 84-78 என்ற புள்ளிகணக்கில், ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. NBAயில் விளையாடுகின்ற யாவ் மிங், யீ ச்சியன் லியன், இப்போட்டியில் கலந்துகொள்ளவில்லை. கோ சீ ச்சியாங் பதவி ஏற்றி பின், சர்வதேச போட்டியில் பெறுகின்ற முதல் வெற்றி, இதுவாகும். 2வது நட்புப்போட்டி, 30ம் நாள் சீன வடக்கிழப்பகுதியிலுள்ள யிங் கோ நகரில் நடைபெற்றது. 2009ம் ஆண்டு சீன ஆடவர் கால்பந்து தொடர்ப் போட்டியின் 13வது சுற்றுப்போட்டி முடிவடைந்தது. பெய்ஜிங் அணி, 1-1 என்ற கோல்கணக்கில், குவாங் சோ அணியை சமம் செய்து, தரவரிசையின் முதலிடம் வகிக்கின்றது. சன் துங் அணி, 2வது இடத்தில் உள்ளது.
|
|