• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-08 18:53:44    
ஷாங் ஆற்றுக்கு கல்யாணம் 2

cri

ஷிமென் பாவ், சூனியக்காரிகளின் தலைவியான 70 வயது சூனிய மூதாட்டியை அழைத்து, மணப்பெண்ணை தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு கூறினார்.
பின் அந்த மணப்பெண்ணை உற்றுநோக்கிய ஷிமென் பாவ் "இவள் ஒன்றும் அவ்வளவு அழகில்லையே, நீ சென்று ஆற்றுக்கடவுளிடம் அழகான பெண்ணை விரைவில் தேர்ந்தெடுப்போம் என்றும், திருமணத்தை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கலாம் என்றும் தகவல் சொல்லிவிட்டு வா" என்று கூறி தன் பாதுகாவலர்களிடம் தலைமை சூனியக்காரியை ஆற்றில் தள்ளிவிடச் சொன்னார். சுற்றி நின்று வேடிக்கை பார்த்த அனைவருக்கும் வியப்பும் அதிர்ச்சியும் முகத்தில் நிழலாடியது. சில நிமிடம் கழித்து, " தகவல் சொல்ல பாட்டியை அனுப்பி நீண்ட நேரமாகிவிட்டது. அவள் திரும்பி வருவாள் என நாள் முழுக்க காத்திருக்க முடியாது, எனவே வேறு ஒருத்தரை அனுப்பிவைக்கலாம்" என்றார் ஷிமென் பாவ்.

அருகிலிருந்து இளம் சூனியக்காரி ஒருத்தியை ஆற்றில் தள்ளிவிடுமாறு பாதுகாவலர்களை பணித்தார். அவள் அழுது புலம்பி, தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் பலனில்லை, அவள் ஆற்றில் வீசப்பட்டாள். சில நிமிடங்கள் கழித்து மூன்றாவதாக ஒரு சூனியக்காரியும் ஆற்றில் வீசப்பட்டாள். நான்காவது சூனியக்காரியையும் ஆற்றில் தள்ளியபின், உள்ளூர் அதிகாரிகளின் பக்கம் திரும்பினார் ஷிமென் பாவ். "தகவல் சொல்ல பெண்கள் சரியானவர்கள் அல்ல போலும், எனவே நாம் இப்போது ஒரு ஆணை அனுப்பலாம்" என்று கூறி சூனியக்காரிகளுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து பணம் பார்த்த ஒரு அதிகாரியை ஆற்றில் வீச பணித்தார். சில நிமிடங்கள் கழித்து, "போனவர்கள் எவரும் திரும்பவில்லையே என்ன செய்வது" என்று அதிகாரிகளை பார்க்க, அவர்கள் அனைவரும் நெடுஞ்சான் கிடையாக தரையில் விழுந்து, தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். நெற்றியில் ரத்தம் வரக்கூடிய அளவுக்கு தலையை தரையில் தேய்த்துக்கொண்டு, உயிர்பிச்சை கேட்ட அதிகாரிகளை கண்ட ஷிமென் பாவ், சரி, போதும், ஆற்றுக்கடவுள் என்ன சொல்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறி அங்கிருந்து சென்றாராம்.


அன்றைக்கு பிறகு, ஆற்றுக்கடவுளுக்கு திருமணம், அழகி ஒருத்தி பரிகாரம் என்று யாரும் ஊருக்குள் கிளம்பவில்லை. பிழைப்புக்காக, சூழ்ச்சி செய்து இளம்பெண்களை ஆற்றுக்கு பலியாக்கிய சூனியக்காரிகளுக்கு, அவர்களது வழிமுறையே தண்டனையானது. துணைபோன அதிகாரிகளுக்கு அதுவே சவுக்கடியானது. ஷிமென் பாவ், முள்ளை முள்ளாலே அகற்றினார்.
பின்னாளில் வெள்ளத்தின் சீற்றத்தை கையாள நீர்ப் பாசன கால்வாய்களை வெட்ட மக்களை பணித்தார் ஷிமென் பாவ். மக்கள் தங்களை இப்படி ஆளுனர் கடினமாக உழைக்க வற்புறுத்துகிறாரே என்று முனகினாலும், ஷிமென் பாவ், இன்றைக்கு மக்கள் கடினம் ஏதுமில்லாத வேலை செய்யவே விரும்புகின்றனர். நான் அவர்களை கடினமாக உழைக்க வலியுறுத்துவதால் அவர்கள் மனநிறைவில்லாது புலம்பினாலும், எதிர்கால சந்ததிகள் இதன் பலனை அனுபவித்து நன்றி சொல்லும் என்றாராம்.