• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-02 19:56:34    
லாசாவிலான மூன்றாவது நாள்

cri


போத்தலா மாளிகை 7வது நூற்றாண்டில் கட்டியமைக்கப்படத் துவங்கியது. 1300 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது. கல், மரம் முதலியவற்றால் கட்டியமைக்கப்பட்ட அதன் வெளிச் சுவரின் அடர்த்தி 2 முதல் 5 மீட்டராகும். உயரம் 10 மீட்டருக்கு மேலாகும்.

இரவில் காண்பதற்கு இது மேலும் அழகாக உள்ளது.

இரவு 10 மணியளவிலும் போத்தலா மாளிகையின் சதுக்கத்தில் இன்னும் பல பயணிகள் உள்ளனர். பலர் திபெத் தேசிய இன ஆடைகளை அணிந்து படம் எடுத்தனர்.

புத்தர் பாடத்தைத் தவிர, லாமாக்கள் தத்துவம், கட்டுமான இயல், மருத்துவயியல் முதலியவை பற்றி இங்குள்ள துறவிகள் கற்று ஆராய வேண்டும்.

போத்தலா மாளிகை வெள்ளை மற்றும் சிவப்புப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை தலாய் லாமாவின் குளிர்கால மாளிகையாகும். முன்பு, இது திபெத் உள்ளூர் அரசின் பணி இடமாக இருந்தது. சிவப்பு மாளிகை, பல்வகை புத்தர் மண்டபங்களால் உருவாக்கப்பட்டது.

போத்தலா மாளிகையில் அதிக பெருமதியுடைய செல்வங்களும் வரலாற்றுச் செல்வங்களும் உள்ளன. 2500 சதுர மீட்டருடைய சுவர் ஓவியம், சுமார் ஆயிரம் புத்த கோபுரங்கள், 10 ஆயிரம் புத்தர் சிலைகள், 10 ஆயிரம் தாங்காக்கள், அரிய புத்தர் போதனைகள் முதலியவை இவற்றில் அடங்கும். 5வது தலாய் லாமாவின் கோபுரம், சுமார் 40 டன் வெண்கலம், 4 டன் தங்கம், 15 ஆயிரத்துக்கு அதிகமான முத்துக்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040