சீன வானொலி மற்றும் திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற அருமையான திபெத் எனும் பொது அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா 3ம் நாள் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் நடைபெற்றது. விழாவில் இந்தியா, நேபாளம், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், செக் குடியரசு, கொலம்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த 7 நேயர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. அவர்கள் இப்போது இலவசமாக திபெத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.
இந்த போட்டியில் இணையதளத்தின் மூலம் கட்டுரைகள், நிழற்படங்கள், ஒலி, ஒளி முதலிய வழிமுறைகளின் மூலம் திபெத்தின் இயற்கை காட்சிகளும் திபெத்தின பழக்கவழங்களும் இணையத்தை பயன்படுத்துவோருக்கு காட்சிக்கு வைத்தன. ஏப்ரல் 20ம் நாள் முதல் மே 31ம் நாள் வரை நடைபெற்ற இவ்விணையதளப் போட்டியில் 32 நாடுகளை சேர்ந்த சுமார் 3 லட்சம் இணையதள பயன்பட்டாளர்கள் பங்கெடுத்தனர்.
பரிசளிப்பு விழாவில் சீன வானொலியின் துணை இயக்குனர் குவான் யூன் பன் கூறியதாவது. சீனாவின் திபெத்தின் தனிச்சிறப்பியல்பு மிக்க இயற்கைக் காட்சிகளையும் தூய்மையான தேசிய இனப் பழக்கவழங்களையும் செழுமையான தேசியப் பண்பாட்டையும் கண்டறியவும் உண்மையான திபெத்தை கண்டறியவும் இணையதளத்தின் மூலம் இந்த பொது அறிவுப் போட்டிக்கான தகவல்கள் துணை புரிந்தன. வெளிநாடுகளில் வாழ்கின்ற இணையதள பயன்பட்டாளர்கள் பலர் திபெத் வந்து உலகின் உச்சியிலுள்ள இந்த அருமையான இடத்தை பார்க்க எதிர்பார்க்கின்றனர் என்று அவர் கூறினார்.
விழாவில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் துணை பிரச்சார அமைச்சர் குவான் மின் சிங் கூறியதாவது. இங்கேயுள்ள நீலநிற வானம் மற்றும் வெண்ணிற மேகம், இங்கே நிகழ்ந்த மாற்றங்கள் இங்கே வாழ்கின்ற பல்வேறு தேசிய இன மக்களின் சிரித்த முகம் ஆகியவை உங்களை இணையதளத்தில் காணப்பட்ட கற்பனை உலகத்திலிருந்து உண்மையான உலகத்திற்கு வர உதவின. இந்த உண்மையான அருமையான திபெத் என்ற சுற்றுலா உணர்வை உலகில் திபெத்தின் வளர்ச்சியில் மிகவும் கவனம் செலுத்தியுள்ள நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன் என்று அவர் கூறினார்.
பரிசளிப்பு விழாவில் எங்கள் நேயர் வளவனூர் புதுபாளையம் எஸ் செல்வம் கூறியதாவது நான் இணையதளத்தில் வெளியிட்ட திபெத் பற்றிய கட்டுரைகளும் நிழற்படங்களும் மற்ற திபெத்தின் வளர்ச்சிகளும் திபெத்தை நேரில் வந்து பார்க்க என்னை தூண்டின. இன்று திபெத்திற்கு வந்த பின் படித்து அறிந்து கொண்ட தகவல்கள் உண்மையானவை என அறிந்து கொள்ள முடிகிறது. என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பயணம் திபெத் பயணம் தான். திபெத்தில் கண்ட மரபு வழிச் செல்வங்களை என்றுமே பத்திரமாக பாதுகாக்கும் சீன நடுவண் அரசுக்கு நான் பாராட்டு தெரிவிக்கின்றேன். நான் கண்ட அனைத்தையும் என் நண்பர்களுக்கு பரிந்துரை செய்வேன் என்று செல்வம் தெரிவித்தார்.
பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட 7 சிறப்புப் பரிசு பெற்ற நேயர்களில் நேபாள நேயர் லீலாமானி பொடல் நேபாள அரசு அதிகாரியாவர். அவர் 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை லாசாவுக்கான நேபாள துணை நிலைத் தூதராக பணிபுரிந்தார். திபெத்திலான 4 ஆண்டுகால பணி அனுபவம் கொண்ட அவர் திபெத் மீது சிறப்புணர்வு கொண்டுள்ளார். இந்த சிறப்புப் பரிசு பெறுவது குறித்து அவர் கூறியதாவது. கடந்த சில பத்து ஆண்டுகளில் திபெத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் அனைவருக்கும் அறிந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வாகும். சீன நடுவண் அரசும் மக்களும் இவற்றுக்காக மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் வளர்ந்துள்ள அடிப்படை சுற்றுலா வசதிகள், பாதுகாக்கப்பட்ட வரலாற்று தொல்பொருட்கள், தனிச்சிறப்பியல்பு மிக்க தேசிய இன பழக்கவழக்கங்கள் ஆகியவை பயணிகளை ஈர்ப்பதில் சிறந்த பயன்களை பெற்றுள்ளன என்று அவர் கூறினார்.
இந்த 7 சிறப்புப் பரிசு பெற்ற நேயர்கள் ஜுன் 30ம் நாள் லாசா சென்றடைந்தனர். இதுவரை அவர்கள் ஜோகாங் கோயில் போத்தலா மாளிகை முதலிய புகழ் பெற்ற இடங்களை பார்வையிட்டனர். இனி அவர்கள் நாமும்சோ ஏரியின் காட்சி சானான் பிரதேசத்தில் அமைந்துள்ள புத்தமத மடங்கள் ஆகியவற்றில் சுற்றுலா பயணம் மேற்கொள்வர்.
|