• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-03 20:34:53    
லாசாவில் ஆடிப் பாடிய செல்வம்

cri

நேற்றிரவு லாசாவிலுள்ள சீன வானொலி மற்றும் சீன மத்திய வானொலி நிலையத்தின் செய்தியாளர் மையம் எமது பிரதிநிதிக் குழுவுக்கு வரவற்பு விருந்து அளித்தது.


இந்த மையத்தைச் சேர்ந்த 10 பணியாளர்கள் அனைவரும் திபெத்தைச் சேர்ந்தவராவர். அனைத்து திபெத் இன மக்களைப் போல் அவர்கள் ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்றவராவர். செல்வம் விருந்தில் தமிழ் காதல் பாடலை பாடினார். பிறகு, திபெத் செய்தியாளர்கள் மற்றும் இதர நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ஆடினார்.

 

விருந்தில் ஷெர்பா இளைஞருடன்
 
இன்று காலை லாசா புறநகரிலுள்ள லாரு சதுப்பு நிலத்துக்குச் சென்று சுற்றிப்பார்த்தோம்.
லாரு சதுப்பு நிலம் தேசிய நிலை இயற்கை பாதுகாப்புப் பிரதேசமாகும். இதன் நிலப்பரப்பு 12 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். கடல் மட்டத்திலிருந்து 3645 மீட்டர் உயரத்தில் அமைந்த இது சீனாவில் ஒரேயொரு நகர இயற்கை சதுப்பு நிலமாகும். அன்றி, உலகில் மிகப் பெரிய இயற்கை சதுப்பு நிலமுமாகும்.

இங்கே எங்கெங்கும் பசுமையாக காணப்படுகின்றது. எருமைகள், பறவைகள் பல கண்டோம். இந்தச் சதுப்பு நிலப்பிரதேசம், லாசா நகரின் வானிலையைச் சரிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது என்று கூறப்பட்டது.


செல்வமும் லாசா நகர் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரும், பணியாளரும்

பிறகு, திபெத் அருங்காட்சியத்தைப் பார்வையிட்டோம். இதில் அதிக தொல் பொருட்களும், மதிப்பு மிக்க செல்வங்களும் உள்ளன. குறிப்பாக, அவற்றின் மூலம், வரலாற்றில் திபெத் உள்ளூர் அரசுக்கும் நடுவண் அரசுக்கும் இடையிலான தொடர்பு பற்றி தெளிவாக அறிந்து கொண்டோம். திபெத் தன்னாட்சிப் பிரதேசம் சீனாவின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும் என்று இது நிரூபித்துள்ளது.