• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-04 20:33:51    
நானும் நாம்சோ ஏரியும்

cri


வணக்கம். ஜுலைத் திங்கள் 4 ஆம் நாள் எனது சீனப் பயணத்தின் ஆறாவது நாளாகும். நேற்றிரவு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சார்பில் நேயர்களுக்கும் சீன வானொலி தரப்பினருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. திபெத் பாணியிலான எண்ணற்ற உணவு வகைகள் பரிமாறப்பட்டன. திபெத் அரசின் கம்யூனிஸ்ட் கட்சிக் கமிட்டியின் விளம்பரத் துறை துணைத் தலைவர் வாங்மின்சிங், திபெத் வானொலி நிலையத் தலைவர், திபெத் அரசின் செய்தி அலவலக துணைத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நேயருக்கும் ஐந்துபேர் அடங்கிய திபெத் இசைக்குழு வாழ்த்துப் பாடலை பாடி வரவேற்பு தெரிவித்த்து. முக்கிய பிரமுகர்களுடன் சீன இந்திய நட்புறவு தொடர்பான கருத்துக்களை வாணியின் உதவியுடன் பரிமாறிக் கொண்டேன். இரவு ஓய்வுக்குப் பின், இன்று அதாவது ஜுலைத் திங்கள் 4 ஆம் நாள் லாசாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாம்சோ ஏரியைக் காண புறப்பட்டோம். 285 கிமீ தொலைவிலுள்ள அவ்விடத்தை நோக்கி பேருந்தின் மூலம் பயணம் செய்த்து இனிய அனுபவமாக அமைந்தது. சுற்றிலும் எங்கு நோக்கினும் மலைகள். இருபக்கமும் மலைகள் சூழ, மலைகளின் நடுவே நெடுஞ்சாலை அமைந்திருந்த்து. நாங்கள் பயணம் செய்த நெடுஞ்சாலைக்கு அருகில் சிங்காய் திபெத் இருப்புப் பாதையும் இருந்தது. நெடுஞ்சாலைக்கும், இருப்புப் பாதைக்கும் இடையே ஆற்று நீர் பாய்ந்து சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.



கிட்டத்தட்ட 150 கிமீ தொலைவு வரை என்னால் சிங்காய் திபெத் இருப்புப் பாதையை கண்டு மகிழ முடிந்தது. ஏராளமான பாலங்கள், குகைகள் வழியாக அமைக்கப்பட்டிருக்கும் இப்பாதையின் கட்டுமானம் பிரமிக்கத்தக்கதாய் இருந்த்து. திபெத்தின் வளர்ச்சியை மேலும் முன்னேற்றுவிக்கும் வகையில் இப்பாதையை உருவாக்கிய சீன நடுவண் அரசுக்கு இந்நேரத்தில் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.



பயணத்தின் வழியில், கடல் மட்டத்திலிருந்து 5190 மீ உயரமுள்ள ஓரிடத்தில் 15 நிமிட நேரம் கழித்தோம். அங்கே வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்தது. பகல் 1 மணி அளவில் நாம்சோ ஏரியை வந்தடைந்தோம். இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 4321 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் உள்ள ஏரி இதுவாகும். தொலைவில் இருந்து பார்க்கும்போது, ஏரி நீரின் நிறம் கருநீலமாக காணப்பட்டது. குடிநீரைப் போல ஏரியின் நீர் தெளிவாக காணப்பட்டது. ஏரியின் மறுகரையைக் காண முடியவில்லை. அந்த அளவிற்கு மிகப் பெரிய ஏரியாக இருந்தது. ஏரியின் அருகே நியன்சிங்தாங்குவா என்னும் பனிமலை காணப்படுகிறது. திபெத் புத்த மதத்தவர்களின் எட்டு புனித மலைகளில் இதுவும் ஒன்றாகும். ஆண்டு முழுவதும் இம்மலை பனியால் மூடப்பட்டிருக்குமாம்.



பின்னர் அங்கிருந்து புறப்பட்டு லாசா நோக்கி திரும்பினோம். வழியில், பண்டைக்காலத்தில மங்கோலியக் குதிரை வீர்ர்கள் வசித்த தாங்சுன் மாவட்டத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். தற்போது, இன்னும் இங்கே மங்கோலியக் குதிரை வீர்ர்களின் வம்சாவழியினர் வாழ்ந்து வருகின்றனர். மேலும், 1990 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது திபெத் இன மங்கை ஒருவர் தீபமேந்திய நினைவு இடத்தையும் பார்வையிட்டோம். தீபமேந்திய நிலையில் அவரின் பெரிய உருவச்சிலை இங்கே காணப்படுகிறது.
லாசாவிலிருந்து 285 கிமீ தொலைவில் இருக்கும் நாம்சோ ஏரிக்கு பேருந்தில் பயணம் செய்தது ஓர் இன்பமான அனுபவமாகும். இருபுறமும் மலைத் தொடர்கள். வெயிலில் மின்னும் பனிமலைகள். மேய்ச்சல் நிலங்களில் மேயும் ஆடுகள், மாடுகள், ஆறுகள் மற்றும் நீரோடைகள். ஆங்காங்கே ஆயர்களின் கூடாரங்கள். சிறு கூடாரங்களின் வெளியே மோட்டார் சைக்கிள் நிற்பதையும், சூரிய மின்னாற்றல் வசதி செய்யப்பட்டிருப்பதையும் கவனித்தேன். சீன நடுவண் அரசின் கீழ் திபெத் ஆயர்கள் அடைந்த முன்னேற்றத்தை நேரில் கண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.