சொந்தப் பணியை முன்னிட்டு, இன்று காலை நேபாள நேயர் ஷார்மா எங்கள் குழுவை விட்டு, நாட்டுக்குத் திரும்பினார். நேற்றிரவு, விருந்தின் போது, நேயர் நண்பர்கள் அனைவருக்கும் அவர் அன்பளிப்பு வழங்கினார்.
நாம்சோ ஏரி, லாசாவிலிருந்து சுமார் 280 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்தது. ஆனால், இன்று காலை 8 மணி புறபட்டு, மதியம் 1 மணியளவில் அங்கே சென்றடைந்தோம்.
வழியில் காணப்பட்ட சிங்காய்-திபெத் இருப்புப்பாதை
நாம்சோ ஏரி, திபெத்தில் 3 பெரிய புனித ஏரிகளில் ஒன்றாகும். இது உலகில் மிக உயர்ந்த இடத்தில் அமைந்த உப்பு ஏரியும், சீனாவில் 2வது பெரிய உப்பு ஏரியுமாகும்.
லாசாவை விட, இது கடல் மட்டத்திலிருந்து மேலும் சுமார் 1000 மீட்டர் அதிகமான உயர் இடத்தில் அமைந்தது. ஆகையால், இங்கே ஆக்சிஜன் மேலும் குறைவு.
மலைப் பிரதேசத்தில் பயணம் செய்த போது, படிப்படியாக அனைவரும் தலைவலி உணர்ந்தோம். ஆனால், இந்த தெளிவான நீரைக் கொண்டிருக்கும் ஏரியை எங்களது கண்களால் கண்ட போது, நாம் தலைவலியை மறந்துவிட்டோம்.
விரைவில், நிழற்படக் கருவிகளின் ஒலி அடுத்தடுத்து வீசியது.
மனித உலகில் இது சொர்க்கம் என்று அழைக்கத்தக்கது.
பல மத நம்பிக்கையுடையவர்கள் நாம்சோ ஏரியைச் சுற்றி வழிபாடு செய்து, கடவளுக்கு வணக்கம் செய்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 5190 மீட்டர் உயரத்தில் ஒரு நினைவு சின்னம் உள்ளது. இது நானும் செல்வமும் இதுவரை அடைந்த மிக உயரமான இடமாகும்.
|