• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-05 21:47:57    
லோகா மாவட்டத்தில் இனிய பயணம்

cri

வணக்கம். ஜுலைத் திங்கள் 5 ஆம் நாள் எனது சீனப் பயணத்தின் ஏழாவது நாளாகும். இன்று காலை 8.15 மணிக்கு லாசாவிலிருந்து புறப்பட்டு சாலை வழியாக இரண்டு மணி நேரம் பயணம் செய்த பின்னர் லோகா மாவட்டத்தை சென்றடைந்தோம். மாவட்ட எல்லையில் உள்ளூர் வழக்கப்படி எங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மின்சோலிங் கோயிலை சென்றடைந்தோம். துறவியர் மடம் மற்றும் பள்ளியாகவும் கருதப்படும் இக்கோயில் தான்சுன் வட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 17 ஆம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்ட இக்கோயில், 10000 சதுர மீட்டர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. திபெத் புத் மதத்தின் நீமா என்னும் பிரிவு இங்கே துவங்கப்பட்டிருக்கிறது. புத்தரின் மிகப் பெரிய சிலையும், ஏராளமான சிறிய உலோகச் சிலைகளும் இங்கே காணப்படுகின்றன. இங்கே காணப்படும் சாக்காப் பிரிவு மதத் தலைவர்களின் தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலச் சிலைகள் கடந்த ஆண்டு ஜப்பான் மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்டன. இக்கோயிலின் மூன்றாவது தளத்தில் அனைத்துப் பக்கச் சுவர்களிலும் திபெத் புத்த மதத் தவைர்களின் உருவப்படங்கள் தீட்டப்பட்டுள்ளன. முழு சீனாவிலும் புத்த மதத் தலைவர்களின் படங்கள் இங்கு மட்டும்தான் வரையப்பட்டுள்ளன. இந்தியாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காடாங் வெண்கலக் கோபுரமும் இங்கே உள்ளது. சிங் வம்ச காலத்தைச் சேர்ந்த வாழும் புத்தர் பயன்படுத்திய கண்ணாடியில் நாங்கள் எங்கள் உருவத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். பின்னர் கோயிலில் எங்களுக்கு வெண்ணெய்த் தேநீர் வழங்கப்பட்டது. கோயிலில் இத்தேநீரை அருந்தினால், புத்தரின் பாதுகாப்பு கிடைக்கும் என வழிகாட்டி கூறினார்.

தொடர்ந்து பயணம் மேற்கொண்டு, 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட லாங்சாங்லிங் தோட்ட வீடு சென்றடைந்தோம். அக்காலத்திய செல்வந்தரின் வீடான இதில் 7 மாடிகள் உள்ளன. யென் வம்ச ஆட்சியில், திபெத்தில் மொத்தம் 13 ஆட்சிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அப்போது கட்டப்பட்ட 12 மிகப் பெரிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும். இம்மாளிகையில் குடும்பத் தலைவரின் படுக்கை அறை, அவருக்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட சமையல் அறை, வரவேற்பு அறை, கூட்ட மண்டபம் மட்டுமின்றி, அக்காலத்திய கழிவறையும் கூட காணப்பட்டன. ஏராளமான மரத் துண்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இம்மாளிகையின் படிக்கட்டுக்கள் மிகவும் செங்குத்தான முறையில் காணப்பட்டது. குழுவினர் மிகவும் கவனமுடன் படியேற வேண்டியிருந்தது.

இம்மாளிகையின் கீழ்த்தளம், பொருட்களை சேகரிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இருள் சூழ்ந்த அவ்விடத்தை காமிரா விளக்கின் ஒளியில் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தோம். 1959 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை, இத்தோட்ட வீடு பள்ளி விடுதியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீன நடுவண் அரசின் 70 இலட்சம் யுவான் ஒதுக்கீட்டில் இம்மாளிகை 2006 ஆம் ஆண்டில் புணரமைக்கப்பட்டுள்ளது. பின்னர் சேதாங் வட்டத்தின் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது ஓய்வெடுத்தோம்.

கடந்த 5 நாட்களில் திபெத் கால நிலைக்கு நான் பழகிக் கொண்டுள்ளேன். நான் நலமாக இருக்கின்றேன். பிற்பகல் நாய்துங் வட்டத்தில் உள்ள யாம்புலாகாங் எனப்படும் திபெத் பிரதேசத்தின் முதலாவது மாளிகை, திபெத் ஜனநாயக விடுதலை பெற்ற பின் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட முதல் கிராமம் மற்றும் ஏழாம் நுற்றாண்டில் கட்டப்பட்ட சாங்சு கோயில் ஆகியவற்றை பார்க்கச் செல்வேன். அதன் அனுபவத்தை நாளை பகிர்ந்து கொள்வேன். சேதாங் வட்டத்திலிருந்து எஸ்.செல்வம்.