இன்று காலையில் லாசாவிலிருந்து புறப்பட்டு முதலில் நாம் லாங்லின்சை தோட்ட வீட்டைப் பார்வையிட்டோம்.
லாங்லின்சை தோட்ட வீடு, நிலப்பிரபுத்துவ பிரபு ஒருவரின் நிலமாகும். இந்த குடும்பத்தில் தோஜிசா கோயிலின் 2 வாழும் புத்தர்கள், அறிஞர் பஞ்சென் லோசான்யிசி, முன்பு உள்ளூர் அரசின் நிர்வாகி உள்ளிட்ட சில புகழ்பெற்றவர் உள்ளனர். அடுத்து, லோகா மாவட்டத்தில் தென்கிழக்கில் அமைந்த யுங்போலாகாங் எனும் மாளிகை சென்றடைந்தோம். இது திபெத்தின் மிகப் பண்டைய மாளிகையாகும். யுங்போ என்பது doe என்பதாகும். லாகாங் என்பது, தேவன் மண்டபம் என்று பொருள். இந்த கட்டிடம் அமைந்த மலைக்கு வடகிழக்கில் 400 மீட்டர் அப்பாலுள்ள பிரதேசத்தில் Khal நீரூற்றும் உள்ளது. இந்நீரூற்றின் நீரைக் குடித்தால், நோய் தொற்றாது என்று மக்கள் நம்புகின்றனர். பிற்பகல் சாங்சூ கோயிலைப் பார்வையிட்டோம். இந்தக் கோயில் புணரமைக்கப்பட்டு வருகின்றது. சாங்சூ கோயில், இளவரசி வென் சென் இங்கே தங்கியிருந்தார் என்று கூறப்பட்டது. கோயிலிலுள்ள வெண்கல மணி திபெத்தில் மிகப் புகழ்பெற்றது. மேலும் முத்து தாங்கா ஒன்றைக் கண்டு ரசித்தோம்.
புணரமைப்புப் பணியில் ஈடுபடும் பெண்மணி.
|