• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-06 18:53:09    
சீனாவின் சான்சி மாநிலத்தின் கற்குகை

cri

சான்சி மாநிலத்தின் தாதுங் நகரிலுள்ள யியூ காங் கற்குகை, உலகில் புகழ் பெற்றது. இது, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாகும். தற்போது வரை, கண்டறியப்பட்ட சீனாவின் மிகப் பெரிய பண்டைக்கால கற்குகை, இதுவே ஆகும். பல்வகை கற்குகை சிலைகள், மிகவும் அழகாக உருவாக்கப்பட்டன. சீன கலை வரலாற்றில் ஓர் அற்புதமாக இது கருதப்படுகின்றது. இம்மாநிலத்தில், யியூ காங் கற்குகை மட்டுமல்ல, ஏராளமான பழங்காலக் கட்டிடங்கள், சிலைகளும் காணப்படுகின்றன. அவை, மிக உயர் பண்பாட்டுக் கலை மதிப்புள்ளவையாக போற்றப்படுகின்றன. நவீன நகரத்தை உருவாக்கும் போது, இந்த தொல் பொருட்களை இம்மாநிலம் சீராக பாதுகாக்க வேண்டும் என்று பாரம்பரிய வரலாறு வாய்ந்த பண்டைக்கால நகரின் பண்பாட்டையும் பேணிக்காக்க வேண்டும் என்று பண்பாட்டு அறிஞர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர்.

அண்மையில், இக்கண்ணோட்டத்தில் பயன்படுத்தி, புதிய யியூ காங் திட்டத்தை இந்நகரம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டப்படி, சீன சிலை நகரமாக தாதுங் மாற வேண்டும்.


சாங் சி மாநிலத்தின் தாதுங் நகரம், சீனாவின் வட பகுதியில் இருக்கிறது. இந்நகரத்தின் மேற்குப் பகுதியிலுள்ள சொ சான் மலையின் தென் பகுதியில், யியூ காங் கற்குகை உள்ளது. மலையைச் சார்ந்து, சுமார் ஒரு கிலோமீட்டரில் இக்கற்குகை கட்டியமைக்கப்பட்டது. தற்போது, 45 குகைகளில், சுமார் 51 ஆயிரம் பல்வகை சிலைகள் இடம்பெறுகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்த போதிலும், புத்த சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் மிகுந்த ஈர்ப்புடன் விளங்குகின்றன.



தற்போது, முந்தைய தோற்றங்களின் படி, இந்த கற்குகைகளை இயன்ற அளவில் பாதுகாக்க வேண்டும் என்று யியூ காங் கற்குகைக்கான அலுவலகத்தின் ஆய்வாளர் wangjia எடுத்துக்கூறினார்.

 


நண்பர்களே, சீனாவின் சான் சி மாநிலத்தின் கற்குகைகள் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.