• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-06 19:34:15    
சீனாவில் புதிய எரியாற்றல் தொழில் ஆ

cri

கடந்த ஆண்டு முதல், சீனா, தொழில்களின் கட்டமைப்பை விரைவாக சரிப்படுத்தியது. புதிய எரியாற்றல் துறை, உத்திநோக்கு தொழிலாக உயர்த்தப்பட்டது. சீனா இத்தொழிலின் வளர்ச்சிக்கு 5 வழிமுறைகளின் மூலம் உத்தரவாதம் வழங்கும் என்று சீன எரியாற்றல் ஆணையத்தின் துணைத் தலைவர் liuqi தெரிவித்தார். அவர் கூறியதாவது,

புதிய எரியாற்றலை உத்திநோக்கு தகுநிலைக்கு வைப்பது. இத்தொழிலின் வளர்ச்சித் திட்டத்தை சீராக மேற்கொள்வது. தொடர்புடைய தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சியை வலுப்படுத்துவது. இத்தொழிலில் முதலீட்டை அதிகரிப்பது. புதிய எரியாற்றலின் வளர்ச்சியை முன்னேற்றுவது தொடர்பான முறைமையை புத்தாக்குவது என்பன இந்த 5 வழிமுறைகளில் அடங்கும் என்று அவர் விளக்கி கூறினார்.

Liuqi கூறிய புதிய தொழில் துறை வளர்ச்சிக்கான திட்டம், இவ்வாண்டின் ஏப்ரல் திங்களில் சீன அரசு துவக்கிய ஒரு முக்கிய திட்டமாகும். இதற்கு சீன அரசு ஒதுக்கியுள்ள தொகை, 3 இலட்சம் கோடி யுவானை தாண்டும். காற்றாற்றல், சூரிய ஆற்றல், உயிர் வள எருக்கள் எரியாற்றல் முதலிய இயற்கை எரியாற்றல்களும், பாரம்பரிய எரியாற்றலை புதுப்பிக்க ஏற்படுத்தப்பட்ட புதிய எரியாற்றல்களும் இத்திட்டத்தில் அடங்குகின்றன. Liuqi மேலும் கூறியதாவது,

இந்தத் திட்டம், முன்று காரணிகளால் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்று, தற்போதைய நிதி நெருக்கடியை சமாளித்து, உள்நாட்டுத் தேவையை விரிவாக்கி முதலீட்டை ஊக்குவித்து வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது. இரண்டு, காலநிலை மாற்றத்தை சமாளித்து, எரியாற்றல் கட்டமைப்பை சரிப்படுத்தி, தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவது. மூன்று, எதிர்காலத்தில் வளர்ச்சியின் மேம்பாட்டை பெற்று சீன எரியாற்றலின் சர்வதேசப் போட்டியாற்றலை உயர்த்துவது போன்ற முக்கியத்துவத்தை அவர் விளக்கி கூறினார்.

சீன தொழிற்துறை மற்றும் வணிக சம்மேளனத்தின் எரியாற்றல் சங்கத்தின் துணைத் தலைவர் xue liming,Liuqiஇன் கருத்தை ஏற்றுக்கொண்டார். சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பில், ஒட்டுமொத்த பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் புதிய எரியாற்றல் தொழிலின், முக்கிய பங்கு அலட்சியம் செய்யப்பட கூடாது. இது பற்றி அவர் கூறியதாவது,

சீன அரசு 100 கோடி அல்லது 200 கோடி யுவானை ஒதுகீடு செய்தால், சுமார் 10 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள சந்தையை விரிவாக்கும். ஒட்டுமொத்த பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் புதிய எரியாற்றல் துறை ஏற்படுத்தும் பயன் 5 மடங்காகும் என்று xue liming தெரிவித்தார்.

சீனாவில், மிக முன்னதாக வளர்ந்த நல்ல பயன் பெற்ற துறை, அணு ஆற்றல் மின்சாரம் தான். மாசுப்பாட்டில்லாத எரியாற்றலாகிய இது, சீனா பெரிதும் வளர்க்கும் புதிய எரியாற்றல்களில் ஒன்றாகும். 2007ம் ஆண்டு சீன அரசு, மின்சார உற்பத்திக்கான நீண்டகால வளர்ச்சித் திட்டத்தை வெளியிட்டது. 2020ம் ஆண்டு அணு மின்சாரத்தின் உற்பத்தித் திறன் 4 கோடி கிலோவாட்டை எட்டி முழு நாட்டின் மின்சார உற்பத்தியில் 4 விழுக்காடு வகிக்கும் என்பது, அப்போது வகுக்கப்பட்ட இலக்காகும். கடந்த சில ஆண்டுகளாக, வடிவமைப்பு, செயல்பாட்டின் மேலாண்மை, சாதனங்களின் தயாரிப்பு, பணியாளர் பயிற்சி முதலியவற்றில் காணப்படும் திறன்கள் நாளுக்கு நாள் வலிமையாகி வருகின்றன. எனவே அந்த வளர்ச்சி இலக்கு, சரிப்படுத்தப்பட வேண்டும் என்று சீன தேசிய எரியாற்றல் ஆணையத்தின் துணை தலைவர் sunqin தெரிவித்தார். அவர் கூறியதாவது,

2020ம் ஆண்டில், அணு ஆற்றல் மின்சார அளவு மொத்த மின்சார உற்பத்தியளவில் 5 விழுக்காடு வகிக்கும் என்பது, உகந்ததாக இருக்கும். அப்போது, முழு உலகில் அணு ஆற்றல் மின்சாரத்தின் விகிதம் உயரும். சீனாவில் இத்தொழில் வளர்வதற்கு, மிக பெரிய உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்று அவர் கூறினார்.