கடந்த 7 ஆண்டுகால நுணுக்கமான ஆயத்த பணி மூலம் 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஆயத்தப் பணி இறுதியான முன்னேற்ற கட்டத்துக்குள் நுழைந்துள்ளது. ஜுலை 5ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு முன்பான 300வது நாளாகும். பொருட்காட்சியின் முக்கிய பரப்புரை நடவடிக்கைகளில் ஒன்றாக "உலகப் பொருட்காட்சிக்குள் நுழைவது"என்ற தலைப்பில் பெரிய ரகக் கண்காட்சி பெய்ஜிங்கில் நடைபெற்றது. அதேவேளையில் "நாங்கள் உங்கள் பக்கத்தில் இருக்கின்றோம்"என்ற தன்னார்வ தொண்டு நடவடிக்கையும் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. அடுத்த 300 நாட்களில் அரங்குகளின் கட்டுமானம், கண்காட்சி வடிவமைப்புத் திட்டம், அரங்கு கட்டியமைப்பது தொடர்பான ஆயத்தப் பணிகள் ஆகியவை ஒழுங்கான முறையில் நடைபெறும்.
பெய்ஜிங்கில் 5ம் நாள் துவங்கிய கண்காட்சியில் "உலகப் பொருட்காட்சிக்குள் நுழைவதென்ற" பெரிய ரகக் கண்காட்சி மூலம் மக்கள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் வளாக அளவையும் பல்வேறு நாடுகள் இதில் கலந்து கொள்வதற்கு மேற்கொள்ளம் ஆயத்தப் பணியையும் அறிந்து கொள்ளலாம். கண்காட்சியில் சீன அரங்கு, பிரிட்டன் அரங்கு உள்ளிட்ட 59 நாடுகளின் அரங்கு மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஷாங்காய் மாநகராட்சி கமிட்டிச் செயலாளரும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகாரத்துக்கு பொறுப்பான செயல் குழுத் தலைவருமான யூச்சுன்சன் கண்காட்சி துவங்கும் இடத்தில் உரைநிகழ்த்தினார்.
அவர் கூறியதாவது. உலகப் பொருட்காட்சி மனித குலத்தின் பொருளாதாய மற்றும் தார்மீக நாகரிகத்தை ஒன்றிணைக்கும் உலகளவிலான மாபெரும் நடவடிக்கையாகும். நாடு முழுவதிலிருந்து ஆட்களை அணித்திரட்டி உலகின் விவேகத்தை ஒன்றிணைத்து பல்வகை ஊடகங்களை பயன்படுத்தி "நகர் வாழ்க்கையை மேலும் அருமையாக்குவதென்ற" ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தலைப்பை வெளிக்காட்ட வேண்டும். இந்த உலகப் பொருட்காட்சியை பல்வேறு நாடுகளின் நகர நாகரிகத்தின் மேன்மையான அம்சங்களையும் செல்வாக்கையும் முழுமையாக எடுத்து காட்டும் உலகப் பொருகாட்சியாக நடத்த பாடுபடுவோம். இந்த பொருட்காட்சியில் நகர வளர்ச்சி தொடர்பான எண்ணங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அதேவேளையில் நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான இருதரப்பு முன்னேற்றமும் எதிர்கால மனித குலத்தின் வாழ்க்கை மாதிரியும் ஆராயப்படும் என்று அவர் கூறினார்.
நடைபெறும் 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 158 ஆண்டுகால வரலாறு கொண்ட உலகப் பொருட்காட்சி வளரும் நாடு ஒன்றில் முதல் முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஜுலை 5ம் நாள் வரை 239 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள உறுதிப்படுத்தியுள்ளன. சீனா துவக்கத்தில் திட்டமிட்ட 200 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனஙகள் இதில் கலந்து கொள்வதென்ற இலக்கு முன்கூட்டியே நிறைவேறியது. ஆனால் சர்வதேச நிதி நெருக்கடி தொடர்ந்து பரவிய பின்னணியில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான சேர்வுப் பணி மற்றும் 7 கோடி பார்வையாளர்களை ஈர்க்கும் குறிக்கோள் உறுதிப்படுத்தாத காரணங்களை எதிர்நோக்க நேரிட்டது. அதற்காக ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சியூ வே நமது செய்தியாளருக்கு பேட்டியளித்த போது குறிப்பிட்டார்.
அவர் கூறியதாவது. உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வது ஒரு நாட்டின் ஆக்கப்பூர்வமான செயலாகும். அதன் தோற்றம் மற்றும் செல்வாக்கு பற்றிய பரப்புரையுடன் தொடர்புடையது. பல்வேறு நாடுகள் இதில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளன. எடுத்துக்காட்டாக ஜப்பானிய அரங்கை அமைக்க 1300 கோடி ஜப்பானிய யுவான் தேவை. இது பெரிய முதலீடாகும். இன்னொரு நிகழ்வை பார்த்தால் 7 கோடி பார்வையாளர்களில் மிகப் பலர் சீன மக்களாவர். அவர்களை பொறுத்தவரை,இப்பொருட்காட்சி தமது நாட்டின் பண்பாட்டை பரப்புரை செய்யும் சிறந்த வாய்ப்பாகும் என்று அவர் கூறினார்.
இதுவரை ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு சேவை புரிய விண்ணப்பம் செய்த தன்னார்வத் தொண்டர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியது. ஷாங்காய் பொறியியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் யின்ச்சுன்சோ கூறியதாவது. நவீன இளைஞர் என்ற முறையில் நலன் தரும் பொதுச் சேவை நடவடிக்கைகளில் பங்கெடுக்குமாறு மேலும் கூடுதலான இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அருமையாக நடைபெறுவதற்காக நாங்கள் பங்கு ஆற்ற வேண்டும் என்றார் அவர்.
|