• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-06 22:30:34    
திபெத்தில் 6ம் நாள் பயணம்

cri

வணக்கம். ஜுலைத் திங்கள் 6 ஆம் நாள் எனது சீனப் பயணத்தின் எட்டாம் நாளாகும். நேற்று மதிய உணவிற்கு பின் யான்புலாகாங் மாளிகையை சென்று பார்வையிட்டோம். இது முழு திபெத் பிரதேசத்தில் கட்டப்பட்ட முதலாவது மாளிகையாகும். தாஷிட்செரி மலையின் மீது அமைக்கப்பட்ட இம்மாளிகையைக் காண படிக்கட்டுக்கள் வழியாக செல்ல வேண்டியிருந்தது. பயணக்குழுவினரில் முதல் ஆளாக நான் மலை உச்சியை சென்றடைந்தேன்

கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இம்மாளிகை, கி.பி.ஏழாம் நுற்றாண்டில் தற்போதைய வடிவில் இரு அடுக்கு கட்டிடமாக மாற்றப்பட்டது. இங்கே மிகப் பெரிய புத்தர் சிலை காணப்படுகிறது. அச்சிலைக்கு இடப்புறத்தில் முதலாவது திபெத் பேரரசரின் சிலையும், வலப்புறத்தில் 33 வது திபெத் பேரரசரின் உருவச் சிலையும் காணப்படுகின்றன.

மலை உச்சியிலிருந்து நாலாபுறங்களிலும் அமைந்துள்ள விளைநிலங்களை காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, யாலுங் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கசுங் என்னும் கிராமத்திற்கு சென்றோம். இது, திபெத் ஜனநாயக விடுதலை பெற்றபின், சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கிராமமாகும்.

பண்ணை அடிமைகள் எவ்வாறெல்லாம் புரபுத்துவ ஆட்சி முறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதை இங்குள்ள பல்வேறு நிழற்படங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இக்கிராமத்தில் 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்று உள்ளூர் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்பின், கசுங் கிராமம் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

தற்போது இங்குள்ள விவசாயிகளின் ஆண்டு வருமானம் 6000 யுவான் ஆகும். இது முழு நாட்டில் விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானத்தை விட அதிகமானதாகும். நிலப் பிரபுத்துவ அமைப்பு முறையில் இருந்து விடுபட்டு, திபெத் கிராமங்கள் எத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளன என்பதை இக்கிராமத்தை பார்வையிட்டதன் மூலம் நான் அறிந்து கொண்டேன்.

அடுத்து, ஏழாவது நுற்றாண்டில் கட்டப்பட்ட சாங்சு கோயிலுக்கு சென்றோம். சீன நடுவண் அரசு ஒதுக்கிய 2 கோடியே 80 இலட்சம் யுவான் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இங்கே புணரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இங்கே, 30000த்திற்கும் அதிகமான முத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தாங்கா ஓவியம் கண்களைக் கவர்ந்தது. இவ்வோவியத்தில், புத்தர் ஒரு பெண்ணைப் போன்று தோற்றமளிக்கிறார்.

வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய புத்தர் சிலையும் இங்கே உள்ளது. பண்டைய வழிமுறைகளைப் பின்பற்றி புணரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திபெத்திய மகளிர், திபெத் இசைப் பாடலைப் பாடிக் கொண்டே மேல்தள தரைப்பகுதியை புணரமைக்கும் பணியை கண்டு இரசித்தோம்.

இரவு சேதாங் வட்டத்தின் விடுதியில் தங்கினோம். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சார்பில் மிகப் பெரும் அளவிலான இரவு விருந்து அளிக்கப்பட்டது.

இரவு ஓய்விற்குப் பின்னர், இன்று காலை சேதாங் வட்டத்திலிருந்து புறப்பட்டு, லாசா நகர் அருகே அமைந்துள்ள நியாங்ழு கிராமத்திற்கு சென்றோம். இக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பல்வேறு ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை எங்களுக்காக அரங்கேற்றினர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் இக்கலை நிகழ்ச்சி நீடித்தது. திபெத் இசையை மட்டுமல்லாமல், திபெத் இன மக்கள் அணியும் பல்வேறு வடிவ ஆடை ஆபரணங்களையும் காண முடிந்த்து. கண்பார்வையற்ற திபெத் இளைஞர் ஒருவர், அகார்டியன் இசைக் கருவி மூலம் ஸ்பானிஷ் இசையை வழங்கியது என்னைப் பெரிதும் கவர்ந்த்து. 600 ஆண்டுக்கால பழமை வாய்ந்த நீல நிற முகமூடி நடனமும் நன்றாக இருந்தது.

இக்கிராமத்தில், பல்வேறு வடிவிலான திபெத் எழுத்துக்கள் அடங்கிய 108 தாங்காக்கள் உள்ளன. மேலும், திபெத்தை ஆண்ட 42 மன்னர்களின் உருவப்படங்களும் திரைச் சீலைகளில் தனித்தனியாக தீட்டப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் நுணுக்கமாக பார்வையிட்ட பின், லாசா விடுதி திரும்பினோம். கடந்த சில நாட்களாக மேற்கொண்ட கடும்பயணத்தின் காரணமாக இன்று பிற்பகல் ஓய்வு அளிக்கப்பட்டது.

அவ்வாய்ப்பை பயன்படுத்தி நண்பர் வாணியுடன் வணிக வளாகம், புத்தகக் கடை மற்றும் அஞ்சல் நிலையம் சென்று வந்தேன். மீண்டும் நாளை சந்திப்போம். வணக்கம். லாசாவிலிருந்து எஸ்.செல்வம்.