• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-07 17:23:13    
பூ சோ நகரில் ஆங்கில ஆசிரியர் பெட்ஸ் என்பவர்

cri
பெட்ஸ் ரிவேத் எனும் மூதாட்டியின் வயது சுமார் 80 ஆகும். 3 மகள்களும், 11 பேர பிள்ளைகளும், 5 கொள்ளுப் போரன்களும் அவருக்கு உண்டு. பிள்ளைகளால் சூழ்ந்து இன்பமான குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வந்த அவர், பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவு கடந்து சீனாவுக்கு வந்து, கட்டாய பாடம் வழங்குவதற்கான காரணம் என்ன? இன்றைய நிகழ்ச்சியில், தென் மேற்கு சீனாவில் அமைந்துள்ள பூ சோ நகரில் ஆங்கில மொழி ஆசிரியராகவுள்ள பெட்ஸ் பற்றி கூறுகின்றோம்.

பெட்ஸ் ரிவேத் ஒரு உளவியல் துறை முனைவராவார். ஆசிரியராக அவர் 56 ஆண்டுகளாக பணி புரிந்திருந்தார். சீனாவுக்கு வருவதற்கு முன், அவர் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவர், செய்தி ஏட்டில் சீனாவின் பூ சோ நகரில் குவா நான் எனும் மகளிர் கல்லூரி பற்றிய ஒரு கட்டுரையை படித்தார். இந்த கட்டுரை அவருடைய கவனத்தை ஈர்த்த்தது. அவர் கூறியதாவது

அமெரிக்காவின் ஒரு செய்தி ஏட்டில், குவா நான் மகளிர் கல்லூரி பற்றிய கட்டுரையைப் படித்தேன். இந்தக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று, அதில் ஆசிரியராகப் பணி புரிந்த டாக்டர் லியு என்பவர் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். இதைப் படித்த போது, நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணி புரியலாம் என்று அப்போது நான் நினைத்தேன் என்றார் அவர்.

இதற்கு முன்னதாக அவர் சீனாவில் பயணம் செய்ததில்லை. ஆகையால், சந்தேகம் உள்ளது. அந்தக்கட்டுரையை எழுதிய டார்டர் லியு, குவா நான் மகளிர் கல்லூரியில் பணி புரிந்த 5 அந்நிய ஆசிரியர்கள் ஆகியோருடன் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அந்தப் பள்ளி பற்றிய நிலைமையை அவர் விவரமாக கேட்டறிந்தார். நல்ல பள்ளி, நல்ல மக்கள், நல்ல சூழ்நிலை என்ற ஒரே பதில் தான் அவருக்கு கிடைத்தது.

பரிசோதனைக்குப் பின், அவர் முடிவு எடுத்தார். அவர் கூறியதாவது

முற்றிலும் புதியமான வேறுபட்ட அலுவலில் ஈடுபட வேண்டும் என்று நான் என்னிடம் கூறிக்கொண்டேன். சீனாவின் நாகரிகமும் ஐரோப்பிய நாகரிகமும் மிகவும் வித்தியாசமானவை. முயற்சி காலம் ஓராண்டு மட்டுமே என்று தீர்மானித்தேன் என்றார் அவர்.

1992ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கல் பெட்ஸ் சீன பூ சோ நகரை வந்தடைந்தார்.

குவா நான் மகளிர் தொழில் கல்லூரி, நூறு ஆண்டு வரலாறுடைய ஒரு அரசு சாரா உயர் கல்வி நிலையமாகும். அமைதியான பூ சோ புறநகரிலுள்ள மலைக் குன்றின் மீது இது கட்டப்பட்டுள்ளது. அங்குள்ள வாழ்க்கையை பெட்ஸ் விரைவில் விரும்பத் தொடங்கினார்.

பள்ளியில் 2 வார காலம் கற்பித்தப் பின், தொடர்ந்து இங்கே பணி புரிவதென தீர்மானித்தேன் என்றார் அவர்.

நடைமுறை ஆங்கில மொழி மற்றும் குழந்தை கல்வி இயல் துறையில் பெட்ஸ் ஆசிரியராகப் பணி புரிகின்றார். தனது முதலாவது வகுப்பு பற்றி அவர் கூறியதாவது

எனது மாணவர்களைப் பார்த்த போது, அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருந்ததாக நினைத்தேன். ஆகையால், அவர்களை ஆங்கில பெயர்களைத் செரிவுச் செய்யச் செய்தேன். பிறகு, அவர்களது பெயர்களை அட்டையில் எழுதி மேசையில் வைத்தேன். இதன் மூலம் மாணவர்கள் அனைவரையும் அறிந்து கொண்டேன் என்றார் அவர்.

ஆசிரியர் பெட்ஸ் பாடம் நடத்தும் தனிச்சிறப்புடைய வழிமுறை, மாணவர்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளது. Chen qong எனும் மாணவி கூறியதாவது

முன்பு, மேநிலை பள்ளியில் கற்றுக்கொண்ட போது, ஆசிரியர்கள் சொன்னதை நாம் பதிவெடுத்தோம். ஆனால், ஆசிரியர் பைஸின் வகுப்பில், கல்வியை சுவையாக பெற்றோம். அவருடைய வழிமுறை தனிச்சிறப்பானது. உச்சரிப்பு மிக முக்கியமானது என்றும் சரியாக உச்சரித்தால், சரியாக எழுதலாம் என்றும் அவர் கூறுகின்றார். பெட்ஸுடன் விளையாட்டின் மூலம், கல்வி பெற்றோம் என்றார் அவர்.

பெட்ஸின் பார்வையில், பாட நூல்களிலிருந்து மட்டும் கல்வி பெறுவது போதாது. நடைமுறை, வாழ்க்கை ஆகியவற்றிலிருந்து மாணவிகள் மேலதிக அனுபவங்களையும் திறமைகளையும் பெறலாம் என்று அவர் கருதுகின்றார். 10 ஆண்டுகளுக்கு முந்தியது முதல், பொருட்காட்சியகங்கள், நுண் கலையகங்கள், வனப் பூங்காக்கள் ஆகியவற்றில் பயிற்சி செய்ய அவர் ஆண்டுதோறும் மாணவரிகளுக்காக ஏற்பாடு செய்து வருகின்றார். அண்மையில், அவருக்கு ஒரு புதிய கருத்து பக்குவமடைந்தது. இது பற்றி அவர் கூறியதாவது

அடுத்த பாட தவணையில், 5 நட்சத்திர ஹோட்டலுக்கு மாணவர்களுடன் செல்லவுள்ளேன். அவர்களில் எவரும் இத்தகைய அனுபவம் பெற்றது இல்லை. ஏற்பாட்டுச் செலவு உள்ளிட்ட கட்டணத்தை நான் செலவிடுவேன். உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றேன் என்றார் அவர்.

இந்தக் கல்லூரியில் பெட்ஸின் பங்கு இன்றியமையாதது என்பது குவா நான் கல்லூரியின் வேந்தர் lin ben chunஇன் கருத்தாகும். அவர் கூறியதாவது

குவா நான் கல்லூரியை பெய்ஸ் அம்மையார் நேசிக்கின்றார். மகளிர் கல்விக்கு அவர் பங்காற்றியுள்ளார். அவரது பிரச்சாரத்தால், பல ஆசிரியர்கள் இங்கே வந்துள்ளனர். ஆசிரியர்களை உட்புகுத்த அவர் ஒரு இணைய தளத்தை துவக்கி, பிரச்சாரம் செய்கின்றார். கல்விக்கு அவர் தன்னை அர்ப்பணிப்பதென்ற எழுச்சியைக் கண்டு, பல மாணவிகள் அவரை மிகவும் விரும்புகின்றார் என்றார் அவர்.

சீனக் கல்வியின் வளர்ச்சியில் பெட்ஸ் அம்மையாரின் பங்கைப் பாராட்டும் வகையில், 2006ம் ஆண்டு, அவருக்கு சீன அரசின் தேசிய நட்புறவு விருது வழங்கப்பட்டது. விருது பாராட்டியது. விருது பெற்றது பற்றி பெட்ஸ் கூறியதாவது

இந்த விருதை பெறுவதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இது ஒரு புகழ் தான். இதன் கருப்பொருள் மேலும் முக்கியமானது என்றார் அவர்.

உடல் நலமாக இருக்கும் வரை, சீனாவிலுள்ள குவா நான் மகளிர் கல்லூரியிலும் பாடம் நடத்தவுள்ளதாக பெட்ஸ் கூறினார். சீனா தனது மற்றொரு வீடாகும். இதில் தனது குடும்பத்தினர்களும் நண்பர்களும் உள்ளனர் என்று அவர் கூறினார்.