வணக்கம். ஜுலைத் திங்கள் 8 ஆம் நாள் எனது சீனப் பயணத்தின் பத்தாம் நாளாகும். நேற்றிரவு ஒன்பதரை மணிக்கு நானும் வாணியும் பாதுகாப்பாக பெய்ஜிங் மாநகர் திரும்பினோம். கடந்த ஒன்பது நாட்களாக, குறைவான ஆக்சிஜன் உள்ள திபெத் பிரதேசத்தில் தங்கியிருந்தோம். தற்போது இயல்பான அளவில் ஆக்சிஜன் உள்ள பகுதிக்கு திரும்பியதால், அதன் சூழ்நிலைக்கேற்றவாறு உடல்நிலையை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் காலையில் விடுதியில் ஓய்வெடுத்தேன். இன்று காலையில் பெய்ஜிங்கில் லேசான மழை பெய்தது. இதனால், நகரின் வெப்பநிலைமை ஓரளவு தணிவடைந்தது. காலை 11 மணியளவில், நண்பர் கிளிட்டஸ், நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து தன்னுடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பத்து நாட்களுக்குப் பின், அவருடைய இல்லத்தில் அவர் தயார் செய்த தமிழக உணவை சாப்பிட்டு மகிழ்ந்தேன்.. தற்போது என்னுடைய உடல்நலன் நன்றாக உள்ளது. தட்ப வெப்பநிலை மாற்றத்தால் எந்தப் பிரச்னையும் எனக்கு ஏற்படவில்லை. நான் நலமாக இருக்கின்றேன். மீண்டும் நாளை ச்ந்திப்போம். நன்றி. வணக்கம். பெய்ஜிங்கிலிருந்து எஸ்.செல்வம்.
|