
கடந்த சில ஆண்டுகளில், திபெத்தின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, சிங்ஹெய்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்து திறந்து வைக்கப்படுவது ஆகியவற்றினால், பல்வேறு நாடுகளிலிருந்து திபெத்திற்கு வந்து சுற்றுலா பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருமளவில் அதிகரித்து வருகிறது. அனைத்து பயணியும் லாசாவுக்கு வரும் பிறகு, Jokhang கோயில் சென்று பார்க்கின்றோம். இந்த புனிதக் கோயிலை மேலும் நன்றாக பாதுகாக்க, நிர்வாக குழுவின் பணியாளர்கள் முழுமூச்சுடன் பாடுபட்டு வருகின்றனர். எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, பணியாளர் ஒருவர் கூறியதாவது:

கோயிலைப் பாதுகாப்பது, மத நம்பிக்கையாளர் மற்றும் பயணிகளின் தேவையை மனநிறைவு செய்வது ஆகியவற்றுக்காக, கடந்த ஆண்டின் ஜூலை முதல் நாள் முதல், பார்வையிடும் நேரத்தைச் சரிப்படுத்தினோம். காலையில், மதநம்பிக்கையாளர்களும், மாலையில், சுற்றுலாக் குழுக்களும் பார்வை யிடுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

|