• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-09 17:06:38    
புதிய விதிகள்

cri

மக்கள் அனைவரும் தேசிய மக்கள் பேரவை மற்றும் பல்வேறு நிலை உள்ளூர் மக்கள் பேரவைகளின் மூலம் நாட்டின் அதிகாரத்தை மேலும் செவ்வனே புரிந்து கொண்டு நடைமுறைபடுத்தி, உன்மையாக நாட்டின் உரிமையாளராக மாறுவதற்கு நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பு சட்டத்தில் மக்கள் பேரவை அமைப்பு முறை தொடர்பான சில புதிய விதிகள் அரசியல் மற்றும் அமைப்பு முறைகளில் துணை புரிகின்றன. 1988ம் ஆண்டு சீனாவின் 7வது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரிலும் 1993ம் ஆண்டு சீனாவின் 8வது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரிலும் 1999ம் ஆண்டு சீனாவின் 9வது தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரிலும் அரசியல் அமைப்பு சட்டத்திலுள்ள சில விதிகள் திருத்தப்பட்டன.

அரசியல் அமைப்பு சட்டத்தை வகுத்து திருத்துவது தவிர, குற்றவியல், பொது மற்றும் அரசின் அடிப்படை சட்டங்கள், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் அடிப்படை சட்டம், மகௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் அடிப்படை சட்டம் ஆகியவையும் பொருளாதாரம், பண்பாடு, கல்வி, அறிவியல் தொழில் நுட்பம், நிர்வாகம், தேசிய பாதுகாப்பு, தேசம், சுற்றுசூழல் பாதுகாப்பு ஆகிய துறைகள் தொடர்பான சட்டங்களும் தேசிய மக்கள் பேரவை மற்றும் அதன் நிரந்தர கமிட்டி தொகுத்த பல சட்டங்களில் அடக்கம். இந்த சட்டங்கள் நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கைகளில் முக்கிய பங்கு எடுத்துள்ளன. தேசிய மக்கள் பேரவை மற்றும் அதன் நிரந்தர கமிட்டி நாட்டின் சில முக்கிய நிகழ்ச்சிகளை சோதனையிட்டு தீர்மானித்துள்ளன. எடுத்துக்காட்டாக தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி போன்ற இடைக்கால மற்றும் நீண்டகால திட்டம், யாஞ்சி ஆற்றின் மூ மலை பள்ளத்தாக்குத் திட்டப் பணி தொடர்பான தீர்மானம் ஆகியவை இந்த முக்கிய நிகழ்ச்சிகளில் அடங்கின. நாட்டின் கொள்கைத் தீர்மானமான ஜனநாயகமயமாக்கம் அறிவியல் மயமாக்கம் ஆகியவை முன்னேற்றப்பட்டுள்ளன. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணி நவீனமயமாக்க ஆக்கப்பபணி போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசியல் அமைப்பு சட்டம் சட்ட அமுலாக்கம் ஆகியவற்றின் மீதான கண்காணிப்பு, நிர்வாகம், விசாரித்து தீர்ப்பளிப்பு, கண்காணிப்பு வாரியங்களின் பணி மீதான கண்காணிப்பு ஆகியவை படிபடியாக வலுப்படுத்தப்பட்டன. அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் சட்டங்களுக்கான நடைமுறையாக்கம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டின் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளின் அமுலாக்கம் தூண்டப்பட்டது. தேசிய மக்கள் பேரவை மற்றும் அதன் நிரந்தர கமிட்டி உற்சாகத்துடன் தூதாண்மை பரிமாற்றத்தில் ஈடுபட்டு அதற்கும் மற்ற நாடுகளின் நாடாளுமன்றங்கள் மற்றும் மக்களுக்குமிடையிலான புரிந்துணர்வையும் நட்பையும் அதிகரித்து நாடுகளுக்கிடையில் உறவின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளன. தேசிய மக்கள் பேரவை கூட்ட அமைப்பு சீனத் தனிச்சிறப்பியல்பு கொண்டுள்ளது. சீன தேசத்தின் நிலைமைக்கு ஏற்றதாய் அமைகின்றது. சீன மக்களின் ஜனநாயக ஆட்சி மற்றும் சோஷலிச நவீனமயமாக்க கட்டுமானத்துக்கு ஏற்றது என்பதை சீனாவின் நீண்டகால புரட்சி மற்றும் கட்டுமான நடைமுறையாக்கம் எடுத்துக் காட்டியுள்ளது.