• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-09 22:27:55    
பெய்ஜிங்கில் இன்பப் பயணம் 1

cri

வணக்கம். ஜுலைத் திங்கள் 9 ஆம் நாள் எனது சீனப் பயணத்தின் 11வது நாளாகும். இன்று காலையில் தமிழ்ப்பிரிவுத் தலைவர் நண்பர் தி.கலையரசி மற்றும் நண்பர் தமிழன்பன் ஆகியோருடன் பெய்ஜிங் நகரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன். முதலில் கோடைக்கால மாளிகைக்கு சென்றோம். பெய்ஜிங்கின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோடைக்கால மாளிகை 1750 ஆம் ஆண்டு சிங் வம்ச பேரரசர் காவ்சாங் என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். ஆங்கிலோ பிரஞ்சுப் படைகளால் இருமுறை அழிக்கப்பட்ட இம்மாளிகை மீண்டும் தற்போதைய வடிவில் புணரமைக்கப்பட்டது. 293 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோடைக்கால மாளிகையில் குன்மிங் ஏரியைக் காண்பது கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. கோடைக்காலத்தில் பேரரசர்கள் ஓய்வெடுக்கும் இம்மாளிகையை கண்டுகளித்து விட்டு பின்னர் பெய்ஹாய் பூங்கா சென்றோம். லியாவ் வம்சத்தால் பத்தாம் நுற்றாண்டில் அமைக்கப்பட்ட இப்பூங்கா, தொடர்ந்து வந்த பல்வேறு அரச வம்சங்களால் தொடர்ந்து சீரமைத்து விரிவாக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு முதன்முதலாக பொதுமக்களுக்கு திறந்துவைக்கப்பட்ட இப்பூங்காவில் ஏராளமான சுற்றுப் பயணிகள் காணப்படுகின்றனர். நாலாபக்கமும் ஏரிநீர் சூழ்ந்து காணப்படும் இப்பூங்காவில் ஒரு மணி நேரம் கழித்த பின்னர், நான் நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என விரும்பிய கூதுங் என அழைக்கப்படும் பெய்ஜிங்கின் பண்டைக்கால வீதிக்கு நாங்கள் சென்றோம். 700 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இவ்வீதி, குறுகலாகவும், வளைந்து நெளிந்தும் செல்கிறது. இவ்வீதியில் ரிகஷாவில் அமர்ந்து பயணம் செய்தது நல்ல அனுபவமாக அமைந்தது. தெரு அமைப்பு மற்றும் வீடுகளின் அமைப்புக்களில் இன்னும் பண்டைக்கால வடிவம் பின்பற்றப்படுகிறது. மாடி வீடுகள் கட்ட இங்கே அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வீதியில் 1 சதுர மீட்டர் நிலப்பரப்பின் விலை கிட்டத்தட்ட 50000 யுவான் என அறிந்துபோது பெரும் வியப்பாக இருந்தது. இந்த வீதியில் புகழ்பெற்ற கவிஞர்கள், நடிகர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் வாரிசுகள் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

அடுத்து, தியன்மன் சதுக்கம் சென்றோம். அச்சதுக்கத்தில் நான்கு பக்கமும் அமைந்துள்ள கட்டிடங்களின் முன்பு சில நிழற்படங்களை எடுத்துக் கொண்டு சீன வானொலி நிலையம் திரும்பினோம்.

இன்று இரவு சீன வானொலி நிலையத்தின் சார்பில் தென்கொரிய விடுதியில் எனக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. மீண்டும் நாளை சந்திப்போம். சீன வானொலி நிலையத்திலிருந்து எஸ்.செல்வம்.