• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-10 19:47:29    
பெய்ஜிங்கில் இன்பப் பயணம் 2

cri

வணக்கம். ஜுலைத் திங்கள் 10 ஆம் நாள், எனது சீனப் பயணத்தின் 12 ஆம் நாளாகும். இன்று நண்பர் மதியழகனுடன் டியன்தான் என சீன மொழியில் அழைக்கப்படும் சொர்க்கக் கோயிலுக்கு சென்றேன். பேரரசர் யோங்லே என்பவரால் கி.பி.1420 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். கி.பி.16 ஆம் நுற்றாண்டில் டியன்தான் என்னும் பெயர், பேரரசர் ஜியாவ்ஜிங் என்பரால் சூட்டப்பட்டது. 273 ஹெக்டர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் சொர்க்கக் கோயில், 1998 ஆம் ஆண்டு ஐ.நா.வின் மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இவ்விடம், 2005 ஆம் ஆண்டில் 47 மில்லியன் யுவான் தொகை ஒதுக்கீட்டின் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட நகரம் என தற்போது அழைக்கப்படும் அரண்மனை கட்டப்பட்ட அதே காலக்கட்டத்தில்தான், சொர்க்கக் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய சொர்க்கக் கோயில் முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு நண்பகல் சீன வானொலி நிலையத்திற்கு திரும்பினேன். ஏற்கனவே ஒரு முறை பெய்ஜிங்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவிட்டதால், மீண்டுமொரு முறை அவற்றை பார்ப்பதற்கு பதிலாக, சீன வானொலி நிலையத்தில் பணியாளர்களுடன் நேரத்தை கழிக்க விரும்பியதால், இன்று பிற்பகல் முழுதும் சீன வானொலி நிலையத்தில் என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் கழித்தேன்.


இன்று இரவு தமிழ்ப்பிரிவுத் தலைவர் நண்பர் தி.கலையரசியும், அவரது கணவரும் வழங்கும் இரவு விருந்தில் கலந்து கொள்வேன். மீண்டும் நாளை சந்திப்போம். சீன வானொலி நிலையத்திலிருந்து எஸ்.செல்வம்.