வணக்கம். ஜுலைத் திங்கள் 11 ஆம் நாள் இரவு 7..30 மணிக்கு நண்பர் கலைமகள் அவர்களுடன் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையம் புறப்பட்டுச் சென்றேன். என்னை வழியனுப்ப எஸ்.சுந்தரன் அவர்களும் விமான நிலையம் வந்திருந்தார். விமான நிலையத்தின் உள்ளே வரை வந்து, எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நண்பர் கலைமகள் செய்து கொடுத்தார். கலைமகளும், சுந்தரனும் வழியனுப்ப என்னுடைய 13 நாட்கள் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டேன். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்ததால் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இன்று, அதாவது ஜுலைத் திங்கள் 12 ஆம் நாள் சென்னை விமான நிலையத்திற்கு காலை 9.45 மணியளவில் பாதுகாப்பாக, நலமுடன் வந்து சேர்ந்தேன். என்னை நண்பர்கள் விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன், பாண்டிச்சேரி ஜி.இராஜகோபால் மற்றும் என்.பாலக்குமார் அன்புடன் வரவேற்றனர். சீனப் பயண அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டே பகல் 2 மணியளவில் என் இல்லம் வந்தடைந்தேன். மீண்டும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகின்றேன். பாண்டிச்சேரியிலிரு்ந்து எஸ்.செல்வம்.
|