• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-13 18:52:48    
மூல உயிரணு ஆய்வு

cri

சில முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் முதன்முதலில் எதிர்படுகின்ற நபரையோ அல்லது சிறிய நிகழ்வுகளையோ நல்ல அல்லது கெட்ட சகுணங்களாக பார்க்கும் பழக்கம் இன்றும் பலரிடம் உள்ளது. குறிப்பாக பூனை குறுக்கே வந்துவிட்டால் வீட்டுக்கு வந்து சற்றுநேரம் அமர்ந்து பின்னர் மீண்டும் செல்வதுண்டு. இவ்வாறு செல்லும்போது நிறைகுடம் நீர் எடுத்து வருவோர் எதிர்பட்டால் அதனை நல்ல சகுனமாக நினைத்து பயணத்தை மகிழ்ச்சியோடு தொடர்வர். கிராமங்களில் திருமண நாளில் மணப்பெண்ணை மணமகனுடன் அனுப்பும்போது அவர்களின் சீருந்து போவதற்கு எதிரில் சுமங்கிலி பெண் ஒருவரை அவருடைய குழந்தையோடு கடந்து வர செய்வார்கள். கணவரை இழந்தவரோ அல்லது கருவுற இயலாதவரோ முதலில் கடந்துவந்தால் அது புதுமண இணைகளுக்கு நல்ல சகுணமாக பார்க்கப்படுவதில்லை.

திருமணமான பெண்கள் தாய்மை அடையாமல் அல்லது கருவுற இயலாதவராய் இருப்பதை நமது சமுதாயம் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வதில்லை. பொதுவாக, தங்களுக்கான இந்த குறை நீங்க பல்வேறு மருத்துவ முறைகளை முயற்சித்தும் அவை பயனளிக்காத நிலையில் தான் அந்த பெண்களும் வேறுவழியில்லாமல் மனவருத்தம் அடைகின்றனர். இயற்கையாக கருத்தரிக்க முடியாவிட்டால் மருத்துவ சிகிச்சையின் மூலம் செயற்கையாக கருவுறவுறுவதை அனைவரும் விரும்புகின்றனர். இவ்வாறு செயற்கையான கருத்தரிப்பு முயற்சிகளின் தொடர்ந்த வெற்றிகளே stem cell எனப்படும் மூல உயிரணு ஆய்வுக்கு வழியமைத்தது. அதாவது இந்த மூல உயிரணு ஆய்வில் பெண்களின் கருப்பையில் உருவாகும் கருமுட்டையின் அணுக்களை பிரித்தெடுத்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வர். கருமுட்டையிலிருந்து பிரிக்கப்படும் அணு, மூல உயிரணு என்று அழைக்கப்படுகிறது. இந்த மூல உயிரணுக்கள் தன்னைத்தானே புதுப்பித்து கொள்ளக்கூடியவை. அதாவது ஒவ்வொரு நாளும் நம்மிடமுள்ள உயிரணுக்கள் பல இறந்து கொண்டு இருக்கின்றன. அவற்றை ஈடு செய்ய இந்த மூல உயிரணுக்கள் தான் தேவையான உயிரணுக்களை உருவாக்கி புதுப்பிக்கின்றன. இந்த மூல உயிரணு (Stem Cells) ஆய்வுகளால் மனிதன் எதிர்நோக்கும் எல்லா நோய்களுக்கும் தீர்வு கண்டுவிட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூல உயிரணுக்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கருமுட்டையில் பல உயிரணுக்கள் வளர்ந்து விரிவடையும். இந்த கருமுட்டை உருவாகும் போது தொடக்க நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள்ளான உயிரணுக்களின் முளையை, முளைய மூல உயிரணு (Embryonic Stem Cells) எனவும், தொடர்ந்து பிரிந்து பெருகும் உயிரணுக்களை வளர்ந்த மூல உயிரணு (Adult Stem Cells) எனவும் வேறுபடுத்தி கூறுகின்றனர்.

இவ்வாறு மூல உயிரணுக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், கரு வள தன்மையை நனவாக்கும் புதியமுறையை கண்டுபிடித்துள்ளதாக ஷாங்ஹாய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இளம் மற்றும் வயதான பெண் எலிகளின் மூல உயிரணுக்களை பயன்படுத்தி கருமுட்டைகளை உருவாக்கும் புதிய முறையை அறிய வந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முயற்சி பெண்களின் கருவுற இயலாத பிரச்சனைகளை தீர்ப்பதை நோக்கிய நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறு மனிதர்கள் மற்றும் பல பாலூட்டி விலங்குகளின் கரு முட்டைகளை உருவாக்குவது தற்போது அறிவியல் வட்டாரத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இளம் மற்றும் வளர்ந்த பெண் எலிகளிடமிருந்து பெறப்பட்ட மூல உயிரணுக்களிலிருந்து புதிய கரு முட்டைகளை உருவாக்கும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளதாக இயற்கை உயிரணுவியல் என்ற இதழில் வெளியான கட்டுரையில் ஷாங்ஹாய் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு புதிதாக கருமுட்டையை உருவாக்குவது மற்றும் இனபெருக்க மருத்துவம் போன்றவற்றில் முக்கிய செல்வாக்கை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு ஷாங்ஹாயிலுள்ள Jiao Tong பல்கலைகழகத்தின் உயிரின அறிவியல் மற்றும் உயிரின தொழில் நுட்பவியல் கல்லூரியின் பேராசிரியர் Wu ji என்பவரால் வழிநடத்தப்பட்டது. வளர்ந்த பெண் எலிகளின் கருப்பையில், உருவாகி ஐந்து நாட்களே ஆன ஜெம்லையின் எனப்படும் மரபியல் கூறுகளை குழந்தைகளுக்கு அனுப்பும் பண்புகளை கொண்ட மூல உயிரணுக்களை அறிவியலாளர்கள் பிரித்தெடுத்தனர். அவ்வாறு பிரிக்கப்பட்ட மூல உயிரணுக்கள் ஆறு திங்களுக்கு மேல் பண்படுத்தப்படும் முறையில் செயற்கையாக வளர்க்கப்பட்டன. பின்னர் அவை கருவுற இயலாத பெண் எலிகளின் கருப்பையில் மூல உயிரணு மாற்று சிகிச்சை மூலம் செலுத்தப்பட்டன. இவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்ட 80 விழுக்காட்டுக்கு மேலான பெண் எலிகள் ஆண் எலிகளோடு இயற்கையாக சேர்ந்தபின் எலிக்குட்டிகளை ஈன்றதை அறிவியலாளர்கள் அறிய வந்தனர். கருப்பைகளில் உள்ள மூல உயிரணுக்களை பண்படுத்தி செயற்கையாக வளர்த்த பின்னர், கருவுற இயலாத கருப்பைகளில் அவை மூல உயிரணு மாற்று சிகிச்சை மூலம் செலுத்தப்பட்டால் அந்த கருப்பைகளும் வளமாகி அதிலும் கருமுட்டைகள் உற்பத்தியாகின்றன. இதனால் வாரிசுகள் உருவாக வாய்ப்புள்ளதை எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. அப்படியானால், மரபியல் கூறுகளை குழந்தைகளுக்கு அனுப்புகின்ற பண்புகளை கொண்ட மூல உயிரணுக்களை கருவுற இயலாத பெண்களின் கருப்பையில் மூல உயிரணு மாற்று சிகிச்சை மூலம் செலுத்தினால், அவர்களின் கருப்பபைகளும் வளமாகி, கரு முட்டைகளை உருவாக்கும். அதன்மூலம் அவர்களும் குழந்தைகளை பெற்றெடுக்கும் சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இன்னும் மேலதிக ஆய்வுகள் மூலம் இக்கருத்து உறுதிபடுத்தப்பட்டால், கருமுட்டையின் மூல உயிரணுக்கள் பற்றிய புரிதல் மற்றும் கருவுற இயலாதவர்களை கருவுற செய்வது பற்றிய ஆய்வில் எதிர்பாக்காத முன்னேற்றங்கள் ஏற்படலாம். அதேநேரத்தில், இந்த ஆய்வு பற்றிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கண்டுபிடிப்புகளும், ஆய்வின் முடிவுகளும் சரியா என்பதை சீர்தூக்கி பார்த்து ஆராய வேண்டும். அத்தோடு இவ்வாறு பிரித்தோடுக்கப்படும் மூல உயிரணுக்கள் பண்படுத்தப்பட்டு வளர்க்கப்ட்டபின் எத்தகைய தன்மைகளை கொண்டுள்ளன? அவை தான் உண்மையிலேயே கருவள தன்மையை உருவாக்குகிறனவா? என்றும் ஐயமில்லாத வகையில் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்கிறார் பிரிட்டனிலுள்ள எம்.ஆர்.சி தேசிய மருத்துவ ஆய்வு மையத்தின் Robin Lovell-Badge.

பல்வேறு முயற்சிகள் கைகூடாமல் மனம்துவண்டு, சமுதாய ஏளன பார்வையால், உடைந்து போயிருக்கும் கருவுறு இயலாத பல பெண்களுக்கு இந்த ஆய்வு முயற்சியால் உருவாகும் விளைவுகள் பயனளிக்கட்டும்.