• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-13 16:51:28    
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி

cri
கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 5ம் நாள் இலண்டனில் முடிவடைந்தது. ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில், உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் புகழ்பெற்ற வீரர் Federer 3-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க வீரர் Roddickஐ தோற்கடித்து, 2009ம் ஆண்டின் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.

இதன் மூலம், கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளில் ஆடவர் பிரிவில் 15வது சாம்பியன் பட்டத்தை அவர் பெற்றுள்ளார். இதன் மூலம், டென்னிஸ் வரலாற்றில், கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளின் மிக அதிக சாம்பியன் பட்டங்களை பெற்ற வீரராக அவர் மாறியுள்ளார். மேலும், உலக ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் Federer முதலிடத்தை பெற்றார்.
இதற்கு முன்பு, முடிவடைந்த மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கணை Serena Williams 2-0 என்ற நேர் செட் கணக்கில் தனது சகோதரியான Venus Williamsஐ தோற்கடித்து, 3வது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவின் சாம்பியன்

பட்டத்தைப் பெற்றார். இதன் மூலம், கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளில் மகளிர் பிரிவில் 11வது சாம்பியன் பட்டத்தை அவர் பெற்றிருக்கின்றார்.
தவிர, 4ம் நாள் முடிவடைந்த மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில், Serena Williams, Venus Williams இருவரும் 2-0 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலிய இணையை தோற்கடித்து, 2009ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.

மேலும், ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில், கனடா வீரர் Nestor, செர்பிய வீரர் Zimonjic இருவரும் 3-1 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க இணையை தோற்கடித்து, இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரும் பரிசுத்தொகை கொண்ட போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆகியவை உள்ளன. உலக டென்னிஸ் விளையாட்டின் முதல் நிலை போட்டிகள் இவையாகும்