1999 முதல் 2008ம் ஆண்டு வரையான 10 ஆண்டுகளில், திபெத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, சுமார் ஆயிரத்து 60 கோடி யுவானிலிருந்து, மூவாயிரத்து 960 கோடி யுவானாக அதிகரித்துள்ளது.
2008ம் ஆண்டு, திபெத் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வரி சராசரி வருமானம், 3100 யுவானுக்கு மேலாகும். நகரவாசிகளின் நபர்வரி சராசரி ஆண்டு வருமானம், 12 ஆயிரம் யுவானை எட்டியுள்ளது. அவை, 1999ம் ஆண்டில் இருந்ததை விட, சுமார் ஒரு மடங்கு அதிகம்.
தற்போது, முழு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலும், நகர மற்றும் கிராமப்புறச் சமூக உத்தரவாத அமைப்பு முறைமை அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. நபர்வரி சராசரி ஆண்டு வருமானம் 800 யுவானை விட தாழ்ந்து காணப்படும் விவசாயிகள் மற்றும் ஆயர்கள் அனைவரும், மிகத் தாழ்ந்த வாழ்க்கை உத்தரவாத அமைப்பு முறைமையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
|