• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-14 17:33:04    
ஹுவாங்ஷான் மலையில் சுற்றுலா வழிக்காட்டி (அ)

cri
ஹுவான்ஷான் மலையின் வெப்ப ஊற்று காட்சிப் பிரதேசம், பழங்காலத்தில் தாவ்யுவான்சியன்சிங் என அழைக்கப்பட்டது. பொதுவாக, பயணிகள் ஹுவாங்ஷான் மலையைப் பார்வையிடுவது, இங்கிருந்து துவங்குகின்றது. இப்பிரதேசம், ஹுவாங்ஷான் மலையில் அமைந்துள்ள சுற்றுலா உபசரிப்பு மையங்களில் ஒன்றாகும்.

லான்ஷேங் பாலம், இப்பிரதேசத்தின் மையமாகும். இது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 650 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு, தாவ்யுவான் விருந்தகம், வெப்ப ஊற்று விருந்தகம், ஹுவான்ஷான் மலை விருந்தகம் முதலிய தங்கியிருக்கும் விருந்தகங்கள் உள்ளன. அவற்றிலிருந்து, சிகுவாங்கே முகத்துவாரத்திற்கு, 1500 மீட்டர் தொலைவு உள்ளது. யுவூன்கு கோயில் முகத்துவாரத்திற்கான தூரம், 7 கிலோமீட்டர் ஆகும்.

ரென்சி அருவி, சான்தியே ஊற்று, மிங்சியன் ஊற்று, சிகுவாங்கே முதலியவை, இப்பிரதேசத்தில் முக்கிய காட்சி இடங்களாகும்.

ரென்சி அருவி, கடல் மட்டத்திலிருந்து 660 மீட்டர் உயரத்தில் உள்ளது. அதன் நீளம், 50 மீட்டராகும். இரண்டு பகுதி உடைய அது, சீன மொழியில் ரென் என்ற எழுத்தின் வடிவத்தைப் போன்றுள்ளது.

சிகுவாங்கே, முன்பு சிகுவாங் கோயில் என அழைக்கப்பட்டது. அது, மிங் வம்சக்காலத்தில் சியாச்சிங் பேரரசர் ஆட்சியின் போது கட்டியமைக்கப்பட்டதாகும்.