• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-14 11:10:26    
பூசனிக்காய் இடம்பெறும் ஒரு உணவு வகை

cri

வாணி – வணக்கம்.
க்ளீட்டஸ் – வணக்கம், எங்களோடு சேர்ந்து இன்னொரு சுவையான உணவு வகையின் தயாரிப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
வாணி— பூசனிக்காய் உணவு மேசையில் வரவேற்கத்தக்க ஒரு உணவு வகையாகும். இனிப்பான சுவை கொண்ட இதை, சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடப்படலாம்.
க்ளீட்டஸ் – இன்று கோழி இறைச்சி, பூசனிக்காய் ஆகியவை முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவு வகையின் தயாரிப்பு பற்றி எடுத்து கூறுகின்றோம். நேயர்களே, வாருங்கள்.
வாணி – முதலில் தேவையான பொருட்களை கூறுகின்றேன்.

கோழி இறைச்சி அரை கிலோ
பூசனிக்காய் சுமார் 750 கிராம்
பசலைக் கீரை 400 கிராம்
கொண்டைக்கடலை 400 கிராம்
ஓலிவ எண்ணெய் ஒரு தேக்கரண்டி
தேங்காய் பால் 200 மில்லி லிட்டர்
கறி மசாலா ஒரு தேக்கரண்டி
உப்பு 3 கிராம்
வெள்ளை மிளகுத் தூள் 2 கிராம் 

க்ளீட்டஸ் – முதலில், கோழி இறைச்சி, பூசனிக்காய், பசலைக் கீரை ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
வாணி – பசலைக்கீரையை நறுக்கிக் கொள்ளுங்கள். பூசனிக்காயின் தோலை நீக்கி, அதனை 5 சென்டி மீட்டர் நீளமும், ஒரு சென்டி மீட்டர் அகலமும் கொண்ட துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். கோழி இறைச்சியையும் 3சென்டி மீட்டர் நீளமும், ஒரு சென்டி மீட்டர் அகலமும் கொண்ட துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.

க்ளீட்டஸ் – வாணலியை அடுப்பின் மீது வைத்து, ஒலிவ எண்ணெயை அதில் ஊற்றவும். ஒலிவ எண்ணெய் இல்லாவிட்டால், சமையல் எண்ணெயையும் பயன்படுத்தலாம். பிறகு, கோழி இறைச்சி துண்டுகளை அதில் கொட்டி வதக்கவும். சுமார் 4 நிமிடங்களுக்குப் பின், அவற்றை வாணலியிலிருந்து வெளியே எடுக்கலாம்.
வாணி – வாணலியில் மீண்டும் எண்ணெயை ஊற்றுங்கள். மிதமான சூட்டில், பூசனிக்காய் துண்டுகளை சுமார் 6 நிமிடங்கள் வதக்கவும். இறுதியில் பசலைக்கீரையையும், வேக வைக்கப்பட்ட கொண்டைக்கடலைகளையும் வாணலியில் கொட்டி, வதக்கவும்.

க்ளீட்டஸ் – சுமார் 3 நிமிடங்களுக்குப் பின், வதக்கிய கோழியிறைச்சி துண்டுகளை இந்த வாணலியில் கொட்டி, தேங்காய் பாலை அதில் ஊற்றவும். பிறகு, காறிமசாலா தூள், உப்பு, வெள்ளை மிளகு தூள் ஆகியவற்றை அதில் சேர்க்கவும்.
வாணி—வாணலியிலுள்ள பொருட்களை ஒரு பெரிய தேக்கரண்டி மூலம் மெதுவாக கிளற வேண்டும். 3 நிமிடங்களுக்குப் பின், இன்றைய கோழி இறைச்சி, பூசனிக்காய் கறி தயார்.


க்ளீட்டஸ் – இன்று அறிமுகப்படுத்திய உணவு வகை நமது நேயர்களின் வரவேற்பை பெறுவது உறுதி என்று நம்புகின்றேன்.
வாணி – அப்படியா. நேயர்களுக்கு பிடித்தமான சமையல் குறிப்பு என்றால் எனக்கும் மிக்க மகிழ்ச்சி தான். சரி, நேயர்கள் அனைவரும் அறிந்தவாறு, பால் நமது வாழ்க்கையில் இன்றியமையாத உணவு வகைகளில் ஒன்றாகும். ஆனால், அதனை எப்படி அருந்துவது உடலுக்கு நல்லது என்பது பற்றி நம்மில் எத்தனைபேர் அறிந்து கொண்டுள்ளோம்.
க்ளீட்டஸ் – வாணி, அனைவரும் அறிந்து கொள்ள, நீங்கள் எடுத்து கூறுங்கள்.
வாணி – சரி, பாலை சரியாத முறையில் அருந்தாவிட்டால், அதிலுள்ள ஊட்டச் சத்து உடம்பில் சேர்க்கப்பட முடியாது. பாலை குடிக்கும் மிகச் சிறந்த நேரம், காலை தான்.

ஏனென்றால், காலை உணவு வழங்கும் ஆற்றல் ஒரு நாள் தேவைப்படும் மொத்த ஆற்றலின் 25 விழுக்காடு முதல் 30 விழுக்காட்டு பங்கு வகிக்கின்றது.
க்ளீட்டஸ் – ஆகையால், காலையில், ஒரு கோப்பை பாலுடன் ஒரு முட்டையையும் ரொட்டியையும் சாப்பிட்டால் நல்லது.
வாணி – தவிர, மாலை 4 மணியளவில், ஒரு கோப்பை பால் குடிப்பது சிறந்த தேர்வாகும். ஒரு நாள் முழுவதும் வேலை செய்து அல்லது படித்து முடித்த பின், நீங்கள் களைப்பாக உணரக் கூடும். உரிய நேரத்தில், ஊச்சத் சத்துள்ள பாலைக் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும்.

க்ளீட்டஸ் – மேலும். இரவில், தூங்குவதற்கு முன், ஒரு கோப்பை பாலை குடிப்பது, தூங்குவதற்கு துணை புரியும்.
வாணி – ஆமாம், மறவாமல், சில பிஸ்கெட்களையும் பாலுடன் சாப்பிடுங்கள். வெறும் வயிற்றுடன் பாலை குடிப்பது சரியில்லை.