• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-14 15:55:38    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றி உங்களது சீரிய கருத்துகளை, கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்பினீர்கள். அவற்றை இந்நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகின்றோம்.
கலை முதலில் குரல் வடிவத்தில் தெரிவித்த கருத்தை கேளுங்கள். அருமையான திபெத் எனும் இணையத் தள பொது அறிவுப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற வளவனூர் புது பாளையம் எஸ் செல்வம் அவருக்கு மறைமலைர் நகர் சி மல்லிக்கா தேவி தெரிவித்த வாழ்த்தை கேளுங்கள்.
தமிழன்பன் அடுத்து நேயர் நேரம் நிகழ்ச்சி பற்றி தஞ்சை எஸ் பாரமுரள்ளி தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
கலை......காஷ்மீர் பிரச்சினை பற்றி அறிவிப்பதில் திருச்சி அன்னாநகர் விடியார் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, சீனக்கதை பற்றி சின்னவளையம் கு.மாரிமுத்து எழுதிய கடிதம். சூனியக்காரிகள் கிரமத்திலுள்ள மிக அழகான பெண்களை தேடிபிடித்து நதிக் கடவுளுக்கு திருமணம் செய்து கொடுப்பதாக கூறி, அவர்களை உயிரோடு ஆற்றில் இறக்கிவிடும் கோர சம்பவத்தை நாட்டின் அதிகாரி ஒருவர் அறிய வருகிறார். மிகவும் தந்திரமாக செயல்பட்டு, அந்த மூடபழக்கவழக்கத்தை தடுப்பதை விவரித்த சீனக்கதையை மூட நம்பிக்கைகளுக்கு சாவு மணியடிக்கும் நல்ல கதையென எடுத்துக்கொள்ளலாம்.


தமிழன்பன் ஊட்டி எஸ்.கே. சுரேந்திரன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீன சமூக காப்புறுதி சட்டம் பற்றி விபரமாக இந்நிகழ்ச்சியில் தெரிவித்ததற்கு நன்றி. அடிப்படை மருத்துவச் சிகிச்சை காப்பீடு, பணியின்போது காயமடைவதற்கு காப்பீடு, முதியோர் காப்பீடு, வேலையின்மை, மகப்பேறு ஆகிய அனைத்திற்கும் சீன சமூக காப்புறுதிச் சட்டம் பயன்படும் என்பதை இந்நிகழ்ச்சி மூலம் அறிய முடிந்தது.
கலை அடுத்து, இலங்கை புதிய காத்தான்குடியிலிருந்து ச.சீமா சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீனாவின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை எமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் நிகழ்ச்சி இது. சீன வரலாற்றில் திருப்பங்கள் கொண்டு வந்த முக்கிய முடிவுகளை பற்றியும் இதன் மூலம் அறிய முடிகிறது. சீன வானொலி எங்கள் வீட்டில் ஒலிக்காத நாட்களில்லை. இவ்வாறு எங்களது வாழ்க்கையில் சிறப்பிடம் பிடித்துள்ள சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு வளர்க.
தமிழன்பன் தொடர்வது, திருச்சி எம். தேவாஜா மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். கிராமபுற சந்தைகள் என்னும் தலைப்பிலான கட்டுரையை கேட்டேன். சர்வதேச நிதி நெருக்கடியால் ஏற்றுமதியும் வருவாயும் சரிந்து வரும் சூழலில், உள்நாட்டு நுகர்வை அதிகரித்து பொருளாதாரத்தை நிலைநிறுத்த சீனா மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை பாராட்டுக்குரியது. மக்களின் வருவாயை அதிகரிக்கச் செய்து, சந்தையில் அவர்களது கொள்வனவை ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடி வழங்கி வருவது உள்நாட்டு சந்தையை மேலும் விரிவாக்கவும், ஏற்றுமதியை சரிபடுத்தவும் உதவும்.


கலை ஆஸ்கார் விருது பற்றிய சிறப்பு மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன் அனுப்பிய கடிதம். உலக திரைப்படங்களுக்கு மணிமகுடம் சூட்டும் ஆஸ்கார் விருது என்றால் என்ன? அது எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள், விருது வழங்கப்படும் நான்கு பிரிவுகள், ஆஸ்கார் விருது அதிகம் பெற்றுள்ள நாடுகள், இரண்டு ஆஸ்கார் விருதுகளை முதல்முறையாக இந்தியாவுக்கு பெற்றுதந்த எ.ஆர். ரகுமானின் முயற்சிகள் என்று பலவிளக்கங்களை தெரிந்து கொண்டேன். ஆஸ்கார் விருது பற்றி விரிவான விளக்கங்கள் வழங்கிய சீன வானொலிக்கு நன்றி.
தமிழன்பன் அடுத்து, சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி பற்றி மெட்டாலா எஸ். பாஸ்கர் அனுப்பிய கடிதம். அழகான இயற்கைக்காட்சிகள் கொண்ட தீவாக விளங்கும் சீனாவின் சுஜாங் மலையில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டால் கிடைக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை விவரிப்பதாக இந்நிகழ்ச்சி அமைந்தது. 25.4 மீட்டர் உயரமுள்ள வெண்கல புத்தர் சிலை, நீர் பீச்சியடிக்கும் நான்கு நீர்வீழ்ச்சிகள், இதற்கு அழகு சேர்க்கும் விதத்தில் வானவில் ஆகியவற்றின் அழகினை கூறி அந்த இடத்தை கண்டுகளித்தது போன்ற அனுபவம் கிடைக்க செய்தது சிறப்பு.
கலை தொடர்வது, பெரியவளையம் கி. இரவிசந்திரன் சீன பண்பாடு நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். அதில் சீன திருமணங்களில் மணமகளின் காலனியை திருடுவது ஒரு சடங்காக செய்வது வியப்பாக இருந்தது. மணமகளின் காலனியை திருடிவிட்டு, அதனை மீண்டும் திருப்பி கொடுப்பதற்காக மணமகனிடமிருந்து பொருட்கள் பெற்றுக்கொள்வது வேடிக்கையாக இருந்தது. செழுமைமிகு பழக்கவழக்கங்களை எங்களுக்கு அறிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சியாக சீனப் பண்பாடு நிகழ்ச்சி அமைகிறது.


மின்னஞ்சல் பகுதி
புதுக்கோட்டை, G. வரதராஜன்
ஜீன் 26 ம் நாள் சர்வதேசப் போதைப் பொருள் தடுப்பு நாள் என்பதை சீன வானொலியின் மூலமே அறிய முடிந்தது. சமூக சவாலாக விளங்கும் போதைப் பொருள் தடுப்புப் பணியை சீனா கையாள்வது பாராட்டும் வகையில் உள்ளது. சீன அரசவை உறுப்பினர் meng jianzhu வும், அவரது குழுவினரும், பெய்ஜிங் மாநகர இடர்காப்பு ஆணையகத்தைச் சேர்ந்த கட்டாய போதைப் பொருள் பழக்க ஒழிப்பு நிலையத்திற்கு சென்று அங்கு சிகிச்சைப் பெற்றுவருவோரை சந்தித்து, மீண்டும் இயல்பான சமுக வாழ்விற்கு திரும்ப நம்பிக்கையூட்டும் வகையில் பேசியது பாராட்டுக்குரியது. கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனா போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியது. மிக குறுகிய காலத்தில் சுமார் 180 போதைப் பொருள் பழக்க ஒழிப்பு நிலையங்களை அமைத்து, இதுவரை ஒரு லட்சத்து பத்து ஆயிரம் பேரை நல்வழிப்படுத்தியுள்ளதை அறியும்போது மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைகின்றேன். 2005ம் ஆண்டு முதல் போதைப் பொருட்களின் தடுப்பு பற்றி விழிப்புணர்வை மேற்கொண்டு வரும் பிரபல நடிகரும் சர்வதேச செல்வாக்கு மிக்கவருமான ஜாக்கி சான் பரப்புரை தூதராக பணிபுரிவது அதிக நன்மைகள் தரும்.


வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம்
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு நாளான ஜுன் திங்கள் 26 ஆம் நாள் இடம்பெற்ற சீனாவின் போதைப் பொருள் அழிப்புப் பணி என்ற தலைப்பில் செய்தித்தொகுப்பு கேட்டேன். பண்டைக்காலந்தொட்டே போதைப் பொருட்களால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு சீனா. போதைப் பொருட்களுள் ஒன்றான அபினியை மையப்படுத்தி வரலாற்றில் புகழ்பெற்ற அபினிப்போர் சீனாவில் நடைபெற்றிருக்கிறது. தற்காலிக சுகம் தரும் மற்றும் உடல்நலனை, குடும்ப நலனைக் கெடுக்கும் போதைப் பொருட்களை தடுக்க சீனாமேற்கொள்ளும் முயற்சிகளை இந்நிகழச்சி மூலம் அறிந்து கொண்டேன். நடிகர் ஜாக்கிசான், சீனாவில் மட்டுமல்ல, உலகம் முழுதும் புகழ்பெற்ற நடிகராவார். பரப்புரை துதராக அவரைத் தேர்ந்தெடுத்தது மூலம், போதைப் பொருட்களுக்கெதிரான விழிப்புணர்வு மாபெரும் வெற்றிபெறும் என நம்புகின்றேன்.
அருமையான திபெத் என்னும் பொது அறிவுப் போட்டியில் சிறப்பு நேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு சீனாவின் திபெத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் அனைத்திந்திய சீன வானொலி நேயர்மன்ற தலைவர் வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் அவர்களின் திபெத் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்தி பாண்டிச்சேரி என்.வசந்தி, சேந்தமங்கலம், எஸ். எம். இரவிச்சந்திரன் ஆகியோர் மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர்.


சிறுநாயக்கன்பட்டி, கே. வேலுச்சாமி
ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் தூண்கள் அந்நாட்டின் இளைஞர்கள். சீன இளைஞர்கள் போதைபொருட்களின் பழக்கத்திற்க்கு அடிமையாவதை தடுத்து, அதனை அறவே ஒழிக்க, கடுமையான சட்டங்கள், தன்னார்வ தொண்டர்களின் பரப்புரை நடவடிக்ககைள் ஆகியவை மூலம் சீன அரசு எடுத்து வரும் சீரிய முயற்சிகள் எதிர்கால தலைமுறையினரிடத்தில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.