• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-15 21:21:42    
நகரத்தில் வேலை வாய்ப்பை நாடும் விவசாயத் தொழிலாளர் Liu Yongzhen

cri

தச்சுவேலையில் ஈடுபட்ட Liu Yongzhen தனது கைத் தொழில் நுட்பம் பரவாயில்லை என கருதுகிறார். பெய்ஜிங்கில் 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்த அவர், ஓரளவில் நிதானமான, அதிகாரப்பூர்வமான வேலையில் ஈடுபட விரும்புகிறார். வீட்டை அழகுபடுத்தி அலங்கரிக்கும் பணியின் உடன்படிக்கை மூலம் பொறுப்பேற்கும் நோக்கத்துடன், சுமார் 10 ஆயிரம் யுவானை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்துள்ளார். ஆனால் நிதி நெருக்கடியினால், பெய்ஜிங்கில் வீட்டுச் சந்தை மந்தமான நிலையில் இருக்கிறது. எனவே, பகுதி நேர தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவே பலர் விரும்புகின்றனர். இது பற்றி Liu Yongzhen கூறியதாவது—

"தற்போது ஏன் மக்கள் பலர் Liu Li Qiao உழைப்பாற்றல் சந்தையில் வேலை வாய்ப்பு நாடுகிறார்கள்? நாள் சம்பளம் பெறுவது இதற்கு காரணம். இன்று செய்த வேலைக்கு இன்றே பணம் வழங்கப்படுகிறது. பணம் வழங்கப்பட்ட பின் நாளை தொடர்ந்து வேலை செய்கின்றேன்" என்று அவர் கூறினார்.

Liu Li Qiao உழைப்பாற்றல் சந்தையில் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் மக்களில் நல்ல கைத் தொழில் நுட்பம் கொண்டவரின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அவர்கள் குறைந்தது நாளுக்கு 150 யுவான் அல்லது 200 யுவான் சம்பாதிக்க எதிர்பார்க்கிறார்கள் என்று Liu Yongzhen சுட்டிக்காட்டினார். பல ஆண்டுகளாக வேலையில் ஈடுபட்ட அவர்கள் பெயர் அட்டையை அச்சடித்துள்ளனர். Liu Yongzhenனும் பெயர் அட்டையை வைத்துள்ளார். வாய்ப்பு இருந்தால் தனக்கு வேலை வாய்ப்பை பற்றிய தகவலை அறிமுகப்படுத்த விரும்பி, அவர் எமது செய்தியாளரிடம் தனது பெயர் அட்டை ஒன்றை வழங்கினார். வேலை வாய்ப்பு கிடைத்ததும் எமது செய்தியாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதாக அவர் வாக்குறுதியளித்தார்.

பேட்டிக்குப் பின் சுமார் வார காலத்தில் ஒரு நாள் Liu Yongzhen தொலைபேசி மூலம் எமது செய்தியாளருடன் தொடர்பு கொண்டார். அவர் பேசுகையில், 2 நாட்களுக்கு முன் Liu Li Qiao உழைப்பாற்றல் சந்தையில் Shun Yi பிரதேசத்திலுள்ள ஒரு வளர்ப்புப் பண்ணையில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார். உணவு மற்றும் வசிப்பிடம் வழங்குவது தவிர, திங்கள் ஊதியம் 2000 யுவானாகும். இது பெரும் தொகை இல்லை என்றாலும் வருமானம் தான். தற்போதைய இன்னல் தற்காலிகமானது. பெய்ஜிங்கின் வீடு மற்றும் நில உடைமைச் சந்தை நல்ல நிலைக்கு மீட்கப்பட்ட பின், வீட்டை அழகுபடுத்தி அலங்கரிக்கும் வேலையில் மீண்டும் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார்.


1 2