• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-15 10:17:06    
உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டி

cri
25ம் நாள் செர்பிய தலைநகர் பல்கிரேடில் உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தடகளம், நீர் குதிப்பு, ஜூடோ உள்பட 5 போட்டிகளில் 20 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் மேசைபந்து போட்டிகளின் தங்கப்பதக்கங்களை சீன அணிகள் பெற்றன. தற்போது, 15 தங்கம், 18 வெள்ளி 13 வெண்கல பதக்கங்கள் என்ற சாதனையை கொண்டுள்ள சீனப் பிரதிநிதிக் குழு, பதக்கதரவரிசை மற்றும் தங்கப்பதக்க தரவரிசையில் முதலிடத்தில் வகிக்கின்றது.

2010ம் ஆண்டு நவம்பர் 12ம் நாள், குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி துவங்கும் முன், குவாங் சோ நகரில், 8 நிலத்தடி இருப்புப்பாதைகள் கட்டியமைக்கப்படும். இவற்றின் மொத்த நீலம் 235.7 கிலோமீட்டராகும். இந்த 8 சுரங்க இருப்புப்பாதைகள், 80 விழுக்காட்டு விளையாட்டரங்குகளை இணைக்கும் என்று சீனாவின் தென்பகுதியிலுற்ற குவாங் சோ சுரங்க இருப்புப்பாதை நிர்வாக ஆணையத்தின் துணை தலைவர் சாங் ஹேய் யன் 8ம் நாள் தெரிவித்தார்.

பிரிட்டன் ஷார்டன் கால்பந்து மன்றத்துடன், சீன வீரர் சேன் ச்சூ தொடர்ந்து உடன்படிக்கையில் கையொப்பமிடமாட்டார் என்று இம்மன்றம், தனது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டது. ஷார்டன் கால்பந்து மன்றத்தின் சார்பாக அடுத்த ஆண்டுப் போட்டிகளில் சேன் ச்சூ கலந்துகொள்ளமாட்டார். பிரிட்டன் உயர் மட்ட மன்றத்தில் சேர்வதற்கு சேன் ச்சூ முயற்சி செய்கிறார் என்றும் இவ்விணையத்தளம் வெளியிட்டது.
உலக மின்னணு போட்டியின் இறுதி போட்டி, இவ்வாண்டு நவம்பர் திங்களில், சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சிச்சுவானின் சன் து நகரில் நடைபெறவுள்ளது. 80க்கு மேலான நாடுகளைச் சேர்ந்த 1000க்கு மேலானோர் இப்போட்டியில் கலந்துகொள்வர்.

2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உலக மின்னணு போட்டி, உலகதன்மை வாய்ந்த பண்பாட்டு விழாவாகும். அதன் இறுதிப்போட்டி, தென்கொரியா, அமெரிக்கா, சிங்கப்பூர், இத்தாலி ஆகிய நாடுகளில், நடைபெற்றுள்ளது. 2008ம் ஆண்டில், 30 கோடி மக்கள், இப்போட்டியை கண்டு இரசித்தனர்.
பெய்ஜிங் நேரப்படி, 10ம் நாள் விடியற்காலை, இவ்வாண்டில் REAL MADRID கால்பந்து மன்றத்தின் 4வது புதிய வீரரான, பிரான்ஸ் வீரர் காரிம் பேன்செமா REAL MADRID கால்பந்து மன்றத்தின் விளையாட்டரங்கில் ரசிகர்களை சந்தித்தார். மன்ற அதிகாரியுடன் செய்தியாளர் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.