எட்டு திபெத்தினரின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் "திபெத்தில் ஓராண்டு" என்ற ஆவணத்திரைப்படத்தை, சீன மத்தியத் தொலைக்காட்சி மற்றும் பீஃனிகஸ் தொலைக்காட்சி நிலையங்கள் ஒளிபரப்பவுள்ளன.
இந்த ஆவணத்திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும், சீனாவின் புகழ்பெற்ற திபெத்தியல் அறிஞருமான முனைவர் Gelek, 16ம் நாள், பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார். திபதெத் கியாங்செ மாவட்டத்திலுள்ள மருத்துவர்கள், உணவு விடுதியின் உரிமையாளர்கள், ரிக் ஷாக்காரர்கள், கோயிலில் துறவிகள் முதலியோர் பற்றிய கதைகள் இத்திரைப்படத்தில் கூறப்பட்டன. இவர்கள், திபெத் சமூகத்தில் வாழ்கின்ற பாமர மக்கள். இத்திரைப்படம், அவர்களின் வாழ்க்கையையும், வேறுப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் வாய்ப்புகள் மற்றும் போட்டிகளை சாதாரணமாக நடப்பதை போன்று காட்டியுள்ளது. இது, மேலை நாட்டு ரசிகர்களால், ஏற்றுக்கொள்ளப்பட்டு, வரவேற்கப்பட்டுள்ளது என்று Gelek கூறினார்.
|