சீன வானொலி நிலையமும் சீன தேசிய இனங்களின் விவகாரக் கமிடியும் கூட்டாக நடத்துகின்ற " சீன எல்லை மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு சீனாவை அறிவது என்ற சீன வானொலி நிலைய செய்தியாளர்களின் பணிப்பயணம்", ஜூலை 16ம் நாள் துவங்கியது. இந்த தொடர் நடவடிக்கையின் முதல் பிரிவான லியாவ் நிங் மற்றும் ஜி லின் மாநிலப் பயணக் குழு, 16ம் நாள் முற்பகல் புறப்பட்டுள்ளது.
இக்குழுவுக்கு வழியனுப்பு விழா சீன வானொலி நிலையத்தில் நடைபெற்றது. சீன வானொலி நிலையத்தின் இயக்குநர் wang gengnian, சீன தேசிய இனங்களின் விவகார கமிட்டியின் அதிகாரிகள் முதலியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
சீன வானொலியின் செய்தியாளர்கள், சின்ச்சியாங், ஹெய்லுங்ஜியங், லியாவ் நிங், ஜி லின், முதலிய 8 எல்லை மாநிலங்களுக்குச் செல்வர். இந்நடவடிக்கையின் முதல் பிரிவான லியாவ் நிங் மற்றும் ஜி லின் மாநிலப் பயணக் குழு, சீனாவின் shenyang, dandong, yanji, changchun, huludao ஆகிய இடங்களில் 11 நாட்கள் பயணம் செய்து செய்திகள் சேகரிக்கும். தமிழ் பிரிவின் செய்தியாளர்கள் க்ளீட்டஸ் மற்றும் சிவகாமி இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.
|