• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-16 11:19:49    
உலகப்பொருட்காட்சிப் பூங்காவிலுள்ள கட்டிட்டங்கள்

cri
ஷாங்காய் உலகப்பொருட்காட்சி பூங்காவில் ஐந்து நிரந்தர கட்டிடங்கள் இருக்கின்றன. இப்பூங்காவின் நடுப்பகுதியில் குறுக்கே நீண்டு அமைந்த கட்டிடம், குறிப்பிடத்தக்கது. வணிகச் சேவை, உணவுத் துறை, பொழுதுபோக்கு, கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகளுக்கான சேவை முதலிய வசதிகளைக் கொண்ட ஒரு பெரிய ரக வணிக மற்றும் போக்குவரத்து ஒட்டுமொத்த கட்டிடமாகும்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத்தின் துணைத் தலைவர் ஹுவாங் சியன் ச்சி, அறிமுகப்படுத்தியதாவது:
சூரிய ஒளி பள்ளத்தாக்கு என்ற தொழில் நுட்பம், இக்கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம், சூரிய ஒளியைக் கொண்டு, தரைக்கடியிலான இரண்டு அடுக்குப்பகுதிகளில், ஒளியூட்டலாம் என்று, அவர் குறிப்பிட்டார்.
ஐந்து நிரந்தர கட்டிடங்களில், கலை நிகழ்ச்சி அரங்கம் கலை பாணி மிக்கது. வழிகாட்டி சாங் சீ அம்மையார் கூறியதாவது:

இரவில், இவ்வரங்கத்தைப் பார்த்தால், ஒளி நிறைந்த சிப்பியைப் போன்று மிகவும் அழகானது. ரசிகர்களின் எண்ணிக்கையின் படி, இருக்கையின் எண்ணிக்கையைச் சரிப்படுத்தலாம். 4000 முதல் 18000 வரையான ரசிகர்கள் இங்கு ஒரே நேரத்தில் கலைநிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கலாம்.
தவிர, நடப்பு உலகப்பொருட்காட்சியில், தலைமை அகம் அமைக்கப்பட்டது. நகரம், மனித குலம், உயிர், கிரகம் மற்றும் எதிர்காலத்துக்கிடையிலான உறவு பற்றி இதில் விவாதிக்கப்படும். அதன் இரண்டு காட்சியறைகளில், எரியாற்றல் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய கருத்துகள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

நிரந்தர கட்டிடங்களில், உலகப் பொருட்காட்சி மையம், பன்னோக்க திறன்களைக் கொள்கின்றது. செய்தி மையம், விருந்தினர்களுக்கு வரவேற்பு, கூட்டம் நடைபெறுதல் ஆகிய சேவைகளை இக்கட்டிடம் வழங்கும்.
7 கோடி பயணிகளை ஈர்ப்பது, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் முக்கிய இரண்டு இலக்குகளில் ஒன்றாகும். இதனால், 5.28 சதுர கிலோமீட்டர் பரப்பளவான பூங்காவில், போக்குவரத்து பிரச்சினையைத் தீர்ப்பது மிகவும் முக்கியமானது. இது குறித்து, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத்தின் பரப்புரைப் பணியாளர் தியேள பிஃசுய் அம்மையார் கூறியதாவது:

பூங்காவுக்கு அருகிலும், 5 தண்டவாள போக்குவரத்து நெறிகள் உள்ளன. அவற்றில், லூ புஃ பாலத்தின் பக்கத்தில் அமைந்தது, உலகப்பொருட்காட்சிக்கான 13வது இலக்க சிறப்பு போக்குவரத்து நெறியாகும். உலகப் பொருட்காட்சி நடைபெறும் 6 திங்கள் காலத்தில், இந்நெறி, இப்பூங்காவுக்காக மட்டும் திறந்து வைக்கப்படும். உலகப் பொருட்காட்சி நிறைவடைந்த பின், இந்த நெறி நீட்டிக்கப்படும். தவிர, ஹுவாங் புஃ ஆற்றைக் கடந்த இரண்டு சுரங்கப் பாதைகள், மூன்று கப்பல் துறை முகங்கள் ஆகியவையும், பயணிகள், உலகப்பொருட்காட்சி பூங்காவுக்கு வருவதற்கு வசதி அளிக்கும்.