நவ சீனாவின் வைர விழா ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன வானொலி நிலையம் உருகொடுத்த செய்தி சேகரிப்பு நடவடிக்கை, 16-ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனாவின் எல்லைப் பிரதேசங்களில் சீன வானொலியின் சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களின் பயணம் மேற்கொண்டு சீனாவை அறிந்து கொள்வது என்பது, இந்நடடிக்கையின் தலைப்பாகும். முதலாவது செய்தியாளர் குழு இன்று ஜிலின் மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றது. எதிர் வரும் 2 திங்களில், 200க்கு அதிகமான சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் இடம்பெறும் 8 செய்தியார் குழுக்கள், உள்மங்கோலியா, ஹெய் லோங்ச்சியாங், குவாங்சி, யுன்னான் உள்ளிட்ட எல்லைப் பிரதேசங்களில் தொடர்புடைய செய்தி சேகரிப்பு பயணத்தை தொடங்கும்.
இந்த பணிப் பயணம் மூலம், கடந்த 60ஆண்டுகளில் எல்லைப் பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், உள்ளூர் மக்களின் நடையுடைபாவனைகள் அல்லது பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நேயர்கள் மேலும் நன்றாக அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று சீன வானொலியின் இயக்குநர் வாங்கேங்லியான் துவக்க விழாவில் தெரிவித்தார்.
|