
மிகவும் பெரியதாகவும் தரிசாகவும் பல இரகசியங்களை வெளிப்படாமல் மறைத்திருக்கும் புதிராகவும், அவை இருப்பதை உணர்ந்து கொண்டேன். அவற்றில், எத்தனை பொருட்கள் உள்ளதென்று தெரியாது. சி சியா கல்லறைகளின் மூன்றாவது கல்லறையின் பரப்பளவு, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டராகும். இங்குள்ள ஒன்பது பேரரசர் கல்லறைகளில், மிக பெரியதான மிக பாதுகாக்கப்பட்ட கல்லறை, இதுவாகும். இந்தக் கல்லறை மீதான அகழ்வு மற்றும் ஆய்வு, முக்கியத்துவம் வாய்ந்தவை.

சீனாவின் பேரரசர் கல்லறை அமைப்பு முறை வரலாற்றில், சிங் வம்சத்தின் அரசர் கல்லறைகளை தவிர, சி சியா அரசர் கல்லறைகள் சிறுப்பான்மை தேசிய இனத்தைச் சேர்ந்த அரசர் கல்லறைகளாகும். சி சியா கல்லறைகளில், வண்ண கண்ணாடிகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடப் பொருட்கள், சீனாவின் கட்டுமான வரலாற்று ஆராய, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கு கண்டறியப்பட்ட வெண்கல மாடு, கல் குதிரை உள்ளிட்ட தொல்பொருட்கள், சி சியாவின் கைத்தொழில் துறை மற்றும் அப்போதைய உற்பத்தி தொழில் நுட்பத்தை ஆராய, முக்கியத்துவம் வாய்ந்தது.
|