 துங் இனத்திற்கு எழுத்து வடிவமிலான பண்பாடு இல்லை. அதன் வரலாறும் பண்பாடும், வாய் மொழியாக பரவி வருகின்றன. எனவே விழாக்கள், துங் இன மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கின்றன.
புத்தாண்டு விழா

ஆண்டின் கடைசி நாளில், துங் இன மக்கள் அனைவரும், ஒரு கோப்பை கஞ்சியை சாப்பிடுகின்றனர். இது, நல்ல வானிலையையும் அறுவடையையும் பெற வேண்டும் என்பதற்கு அடையாளமாகிறது. தவிரவும், இளம் மகளிர் நீ முந்தி நான் முந்தி என்று போட்டிப்போட்டு கிணறில் நீரை இறைக்கின்றனர். கிணற்று நீரில் குமிழி வெளியாகுவது மங்களமானது என்று கருதப்படுகிறது.
புத்தாண்டில், துங் இன மக்கள் ஒரு குழுவினரை அனுப்பி ஒவ்வொருக்கொடுவர் பரஸ்பர வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். இது, da tong nian என கூறப்படுகிறது. இந்த குழு ஓரிடத்தை சென்றடையும் போது, உள்ளூர் மகளிர் பாடல் பாடியே அவர்களிடம் பல்வகை கேள்விகளை கேட்கின்றனர். அணியின் உறுப்பினர்களும் விரைவாக பதிலளிக்க வேண்டும். பாடல் மூலம் கேள்வியை முன்வைத்து, பதில் அளிக்கின்ற கட்சி மிக சுவாரசியமானது.
பட்டாசு விழா

வேறுபட்ட இடங்களில் துங் இன மக்கள் வேவ்வேறு நாட்களில் பட்டாசு விழாவைக் கொண்டாடுகின்றனர். 3 நிலைகளாக பட்டாசுகள் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பட்டாசின் தலை பகுதியிலும், இனிமையான வாழ்க்கையை அடையாளப்படுத்துகின்ற இருப்பு வளையம் ஒன்று பின்னிப்பிணைக்கப்படுகிறது. பட்டாசு வானில் வெடித்து சிதறியவடன் இந்த இரும்பு வளையம் தரையில் விழுகிறது. பிறகு, அனைவரும் இந்த வளையத்தை பெற பாடுபடுகின்றனர். அதனை பெறுவோர் இவ்வாண்டில் நலமும் வளமும் பெறுவர் என்று நம்பப்படுகிறது. இந்த போட்டி முடிந்தவுடன், பல்வகை நடவடிக்கைகள் துவங்குகின்றன. Lusheng என்ற பாரம்பரிய இசை கருவியை இசைக்கின்ற போட்டி நடைபெறும். வாய்ப்பைப் பயன்படுத்தி, இளைஞர்கள் காதலை வெளிப்படுத்துகின்றனர். முதியவர்கள் பறவைச் சண்டை போட்டி நடத்துகின்றனர். துங் இனத்தின் கிராமங்களில் விழாவின் போது இனிமையான சூழ்நிலை நிறைகின்றது.
|