• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-17 09:32:34    
மிஷேல் ஃபிலிப்ஸின் புதிய சாதனை

cri
புகழ்பெற்ற அமெரிக்க நீச்சல் வீரர் மிஷேல் ஃபிலிப்ஸ் புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளார். 9ம் நாள் நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன் பட்டப்போட்டிக்கான அமெரிக்க தேர்வு போட்டியில், அவர் 50.22 வினாடிகளில் சாதனையை உருவாக்கி, வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் போட்டியின் உலக சாதனையை முறியடித்தார்.

யாவ் மிங் காயமுற்றதால், HOUSTON ROCKETS அணி வெளியிட்ட ஊதியத்துக்கான நிதியதவி விண்ணப்பம், அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் யாவ் மிங், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளமாட்டார் அன்பது உறுதியாயிற்று என்று 9ம் நாள் அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
இருந்த போதிலும், தனது இலட்சிய வளர்ச்சியில் யாவ் மிங் நம்பிக்கை ஆர்வம் கொண்டுள்ளார். கால் காயம் ஆறிய பின், மீண்டும் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்று யாவ் மிங் நம்பிக்கை தெரிவித்தார்.
2009ம் ஆண்டு மகளிர் ஹாக்கி என்ற வளைதடிப் பந்தாட்ட சாம்பியன்பட்ட கோப்பைக்கு ஆயத்தம் செய்ய, சீன மகளிர் அணி, நியுசிலந்து அணியுடன் 2 நட்புப்

போட்டிகளை நடத்தியது. அதில் முறையே 4-2 மற்றும் 3-2 என்ற கோல்கணக்கில் நியுசிலந்து அணி தோல்வியடைந்தது.
உலக மின்னணு போட்டியின் இறுதி போட்டி, இவ்வாண்டு நவம்பர் திங்களில், சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சிச்சுவானின் சன் து நகரில் நடைபெறவுள்ளது. 80க்கு மேலான நாடுகளைச் சேர்ந்த 1000க்கு மேலானோர் இப்போட்டியில் கலந்துகொள்வர்.
2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உலக மின்னணு போட்டி, உலகதன்மை வாய்ந்த பண்பாட்டு விழாவாகும். அதன் இறுதிப்போட்டி, தென்கொரியா, அமெரிக்கா, சிங்கப்பூர், இத்தாலி ஆகிய நாடுகளில், நடைபெற்றுள்ளது. 2008ம் ஆண்டில், 30 கோடி மக்கள், இப்போட்டியை கண்டு இரசித்தனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 1500 மீட்டர் ஓட்ட போட்டியின் சாம்பியனும், பெஹரின் வீரருமான ராஷித் ராம்ஜி உள்ளிட்ட 5 வீரர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஊக்கமருந்துகளை பயன்படுத்தியதாக பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்த 5 வீரர்களும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற சாதனைகள் நீக்கப்பட்டு பதக்கங்கள் பறிக்கப்படும் என்று 9ம் நாள் பிரிட்டன் செய்தி ஊடகங்கள் வெளியிட்டன.