• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-17 09:35:47    
முதியோர் இல்லத்தில் பணியாற்றும் Wang Gui Fang அம்மையார்

cri
வட மேற்கு சீனாவின் Shan Xi மாநிலத்தின் வடப்பகுதியில் உள்ள மலையில், ஒரு சிறு முதியோர் இல்லம் அமைந்துள்ளது. Yi Jun மாவட்டத்தின் Tai An வட்டத்தின் முதியோர் இல்லம் இதுவாகும். 1985ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது முதல், இதில் தங்கியிருக்க பல முதியோர் போய் வந்துள்ளனர். கடந்த 24 ஆண்டுகளாக, இம்முதியோர் இல்லத்தின் தலைவி Wang Gui Fang மட்டுமே இதில் தொடர்ந்து தங்கியிருந்து முதியோருக்கு சேவை புரிந்து வருகின்றார்.
துவக்கத்தில் இம்முதியோர் இல்லத்தில் பணிபுரிய தனது வருகையை பற்றி 60 வயதான Wang Gui Fang அம்மையார் கூறியதாவது:
"நான் திருமணம் செய்த பின், கணவரது குடும்ப சூழ்நிலை நன்றாக இல்லை. எனது கணவருக்கும் அடிக்கடி உடல் நலமில்லாமல் போனது. எங்களுக்கு மூன்று குழந்தைகள். கணவரது பாட்டி, தந்தை மற்றும் தாய் எங்களுடன் கூட்டாக வாழ்ந்தனர். அவர்களுடன் நன்றாக பழகி வாழ்ந்து வந்தேன். எனது கணவரின் ஒரு பெரியப்பாவுக்கு குழந்தைகளில்லை. அவரும் எங்களுடன் இணைந்து வாழ்ந்தார். என்னை ஒரு அன்பான மருமகள் என கிராமவாசிகள் அழைத்தனர். இம்முதியோர் இல்லம் நிறுவப்பட்ட பின், பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, பலர் என்னைப் பரிந்துரை செய்தனர்" என்றார் அவர்.

Wang Gui Fang அம்மையார் முதியோர் இல்லத்துக்கு வந்தது முதல், நாள்தோறும் விடியற்காலை எழுந்து, நீர் எடுத்து வந்து, உணவு சமைக்கிறார். தங்கு தடையின்றி நடந்து செல்ல முடியாத முதியோர் கழிவு அறைக்குச் செல்ல அவர் உதவுகின்றார். இம்முதியோருக்கு உணவு ஊட்டுகின்றார். இந்த வேலைகளை முடித்த பிறகு, முதியோர் இல்லத்தில் வளர்க்கப்படும் இரண்டு பன்றிகளுக்கும் பத்துக்கு அதிகமான கோழிகளுக்கும் அவர் உணவு அளிக்கிறார். தவிர, இம்முதியோர் இல்லத்திற்கு பல பத்து Mu (15 Mu, ஒரு ஹெக்டருக்கு சமம்) நிலப்பரப்புடைய விளை நிலங்கள் உள்ளன. நேரம் இருந்தால், Wang Gui Fang அம்மையார் இந்த விளைநிலங்களில் உழைக்கின்றார்.
முதியோர் இல்லத்திலுள்ள வேலைகள் மிகவும் சுத்தமானவை அல்ல. எளிதாக களைப்படையச்செய்யக் கூடியவை. ஆனாலும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகமில்லை. சில சமயங்களில், முதியோர் கோபமாக இருக்கும் போது, முதியோர் இல்ல பணியாளர்களைத் திட்டுகின்றனர். பலர் இங்கே பணிபுரிந்த சில திங்களில், முதியோர் இல்லப் பணியைக் கைவிட்டனர். Wang Gui Fang அம்மையார் இங்கே தங்கியிருந்து, தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். அவரும் விட்டு சென்றால்,

இங்குள்ள முதியோர் பராமரிப்பு பெறாமல் இருப்பர் என்று அவர் கவலைப்படுகிறார்.
இந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர், Tai An வட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர்களில் மூளை வளர்ச்சி குன்றியவர்கள், காது கேளாதோர், உடல் சவால் மிக்கவர் பலர் இருக்கின்றனர். உள்ளூர் அரசு திங்களுக்கு ஒவ்வொரு முதியோருக்கும் உதவித்தொகை வழங்குகிறது. அன்புள்ளம் கொண்ட Wang Gui Fang அம்மையார், தமது பெற்றோரைப் பராமரிப்பது போல், இம்முதியோரை நன்றாக பராமரிக்கின்றார். முதியோர் சிலர் Wang Gui Fang அம்மையாரை தங்களது மகளாகவே கருதுகின்றனர்.
இம்முதியோர் இல்லத்துக்கு வந்த துவக்கத்தில், 74 வயதான Wang Yuan Fu என்பவர், தன்னை தானே பராமரிக்க முடியவில்லை. Wang Gui Fang அம்மையார் தான் அவரைக் குளிப்பாட்டினார். அவர் கழிவு அறைக்குச் செல்ல உதவினார். பின்னர், அவ்வட்டத்தில் சீன சுதேச மருத்துவர் ஒருவரின் சிறந்த மருத்துவ கைவண்ணத்தை அறிந்த Wang Gui Fang அம்மையார், Wang Yuan Fuக்கு சிகிச்சை அளிக்குமாறு அவரை அழைத்தார். சில ஆண்டுகளில் Wang Yuan Fuவின் நோய் படிப்படியாக குறைந்தது. தற்போது, Wang Yuan Fu அறையில் நடந்து செல்ல முடியும். Wang Yuan Fu கூறியதாவது:
"நல்லது. இங்கே நல்ல உணவுகளைச் சாப்பிடுகின்றேன். Fang அதிக காய்கறிகளை வாங்குகின்றார். அவள் எங்களை செவ்வனே பராமரிக்கின்றார்" என்றார், அவர்.