சீனாவின் எல்லைப் பிரதேசங்களில் சீன வானொலி நிலையத்தின் சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் பயணம் மேற்கொண்டு சீனாவை அறிந்து கொள்வது என்ற செய்தி சேகரிப்பு நடவடிக்கையின் முதலாவது செய்தி குழு, 16-ம் நாள் இரவில் வடகிழக்கு சீனாவிலான ஜிலின் மாநில தலைநகர் சாங்சுன் சென்றடைந்தது.
இந்தக் குழுவில், சீன வானொலி நிலையத்தைச் சேர்ந்த இந்தியா, ஸ்விட்சர்லாந்து, ஜபபான் மற்றும் 20க்கு மேலான சீன செய்தியாளர்கள் இடம்பெறுகின்றனர். 11 நாட்கள், ஜிலின் மற்றும் லியௌ நிங் மாநிலங்களின் எல்லைப் பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக மேம்பாடு, சீன-வடகொரிய பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு முதலியவை பற்றி, அவர்கள் பேட்டி கண்டு செய்தி சேகரிப்பர்.
இது, சீன வானொலி நிலையம் உருகொடுத்த செய்தி சேகரிப்பு நடவடிக்கையாகும். 200க்கு அதிகமான சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் இடம்பெறும் 8 செய்தியாளர் குழுக்கள், உள்மங்கோலியா, ஹெய் லோங்ச்சியாங், குவாங்சி, யுன்னான் உள்ளிட்ட எல்லைப் பிரதேசங்களில் தொடர்புடைய செய்தி சேகரிப்பு பயணத்தை மேலும் தொடங்கவுள்ளன.
|