• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-18 18:45:57    
ஜீலின் மாநிலத் ஆளுனருடன் சந்திப்பு

cri

வடகிழக்குச் சீனாவிலான எமது பயணத்தின் முதல் நிலையாக ஜீலின் மாநிலத்தின் தலைநகரான சாங்ச்சுன்னில் நேற்று சில தொழில்நிறுவனங்களை பார்வையிட்டோம். ஜூலை 18ம் நாளான இன்று, பிற்பகல் ஜீலின் மாநிலத்தின் ஆளுனர் ஹான் ச்சாங்ஃபூவை சந்திக்கும் வாய்ப்பு எமது பயணக்குழுவினருக்கு கிடைத்தது.

லியாவ்னிங், ஹெய்லுங்ஜியாங் மாநிலங்களையும், உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தையும் ஒட்டி அமைந்த, ரஷ்யாவை ஒருபுறமும், ஒரு ஆறால் பிரிக்கப்பட்டு நிற்கும் வடகொரியாவை மறுபுறத்திலுமாகக் கொண்ட மாநிலம் ஜீலின் மாநிலம். 2007ம் ஆண்டின் கணக்குப்படி 2 கோடியே 73 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட ஜீலின் மாநிலத்தில் கொரிய இனம், மங்கோலிய இனம், ஹுய் இனம், ஷிபோ இனம் உட்பட 49 தேசிய இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். ஜீலினில் சில இனத் தன்னாட்சி மாவட்டங்களும், 34 குறிப்பிட்ட இன நகராட்சிகளும் உண்டு.

ஜீலின் மாநிலத்தில் ஆளுனர் ஹான் ச்சாங்ஃபூ

ஆக பல்வகை இனங்களை சேர்ந்தோர் வாழும் இந்த மாநிலத்தின் ஆளுனரை சந்திக்கவும், அவரிடம் கேள்விகள் எழுப்பவும் பயணக்குழுவுக்கு வாய்ப்பு கிடைத்தபோது, முன்பே தெரிவு செய்த கேள்விகளோடு அனைவரும் தயாராகச் சென்றோம்.

தமிழ்ப்பிரிவின் பணியாளர் க்ளீட்டஸ்.

ஜீலின் மாநிலத்தில் ஆளுனர் ஹான் ச்சாங்ஃபூ புன்சிரிப்போடு அனைவரது கேள்விகளுக்கும் பதிலளித்தார். கடந்த 60 ஆண்டுகளில் ஜீலின் மாநிலத்தின் வளர்ச்சி, தற்போதைய வளர்ச்சி நிலை, நிதி நெருக்கடியின் பின்னணியிலான அறைகூவல்கள், நடுவணரசின் உதவி மற்றும் ஆதரவு, மாநிலத்திலுள்ள பல்வேறு தேசிய இனங்களிடையிலான இணக்கம் மற்றும் சகவாழ்வு, அவர்களுக்கான சிறப்புத் திட்டங்கள், எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்கள், இலக்குகள், பிரச்சனைகளை சமாளிப்பதற்கான ஆயத்தப்பணிகள் என சீன வானொலியின் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, மிகத் தெளிவாக, அமைதியாக, புள்ளி விபரங்களோடு அவர் பதில் அளித்தது, சிறப்பாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

பொறுமையோடு அவர் அளித்த பதில்களை மொழிபெயர்த்து உதவினார் நம் தமிழ்ப்பிர்வின் இளம் பணியாளர்களில் ஒருவரான சிவகாமி.

ஜீலின் மாநிலத்தின் ஆளுனருடனான சந்திப்பு நிறைவடைந்த பின், ஒரு முக்கிய நிகழ்வும் இடம்பெற்றது.

கைச்சாத்தீட்டு வைபவம்

சீன வானொலியும், ஜீலின் மாநிலத்தின், யேன்பியன் கொரிய தன்னாட்சிப் பிரதேசத்தின் வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வாரியமும் இணைந்து ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றை கையொப்பமிட்டன. சீன வானொலியின் சார்பில் தெற்காசி மொழிகளுக்கான, முதல் ஆசியப்பிரிவுத் தலைவர் ஹெ ச்சின் சாவும், யேன்பியன் கொரிய தன்னாட்சிப் பிரதேசத்தின் வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வாரியத்தின் சார்பில் அதன் அதிகாரி ஹான் லுங் குங்கும் உடன்படிக்கைகளை பரிமாறிக்கொண்டனர்.

இன்றைய முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டபின் இன்றைய கடமையை முடித்து, அடுத்து 19ம் நாள் யான்ச்சின் நகருக்கு பயணமாகி, மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்வதாக எமது நிகழ்ச்சி நிரல் அமைந்துள்ளது.
நாளை மேலும் புதிய தகவல்களோடு சந்திப்போம்.

சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்காக, சாங்ச்சுன் நகரிலிருந்து,
சிவகாமி மற்றும் க்ளீட்டஸ்....