வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க, சீனாவின் ஜீலின் மாநிலம் சீரான சூழ்நிலை உருவாக்க பாடுபடுகிறது என்று ஜீலின் மாநிலத்தின் தலைவர் ஹன் சாங்பு 18ம் நாள் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.
முதலீட்டு கொள்கைகளின் வெளிப்படைத் தன்மையையும் அரசின் சேவை நிலையையும் தொடர்ந்து வலுப்படுத்துவது, பரிசீலித்து ஏற்றுக்கொள்ளும் விதிமுறைகளை எளிதாக்குவது, முதலீட்டாளர்களின் நலன்களைப் பேணிக்காக்க பல முன்னுரிமை கொள்கைகளை வகுப்பது முதலியவை இதில் இடம்பெறுகின்றன எனறும் அவர் குறிப்பிட்டார்.
|