சீனாவில் மிக முன்னதாக நிறுவப்பட்ட தொழிற்துறை தளமான வடகிழக்கு சீனாவில் அமைந்த லியாவ் நிங் மாநிலம், சீன பொருளாதார வளர்ச்சிக்காக முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால், நீண்டகால தொழிற்துறை வளர்ச்சி, இங்குள்ள சுற்றுச்சூழலைப் பாதித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, வடகிழக்கு சீனாவின் பழைய தொழிற்துறை தளங்களை மறுமலர்ச்சி செய்வதென்ற சீனாவின் திட்டம், படிப்படியாக நடைமுறைப்படுத்தப்ப்டு வருகிறது. அத்துடன், லியாவ் நிங் மாநிலத்தின் மாசுபாட்டுக் கட்டுப்பாட்டுப் பணியும் குறிப்பிடத்தக்க பயன் பெற்றுள்ளது.
லியாவ் நிங் மாநிலத்தின் தலைநகரான ஷென் யாங் நகரம், இம்மாநிலத்தின் மிக பெரிய தொழிற்துறை நகரமும் ஆகும். நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதிரி நகரத்தை கட்டியமைப்பது என்ற இலக்கை, 2001ம் ஆண்டில் ஷென்யாங் நகர அரசு முன்வைத்தது. பிறகு, இந்நகர அரசு 4000 கோடி யுவானை ஒதுக்கி, பெருமளவிலான, பன்முகமான இடைவிடாத சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணியை மேற்கொண்டு வருகிறது. அதற்கு பிந்திய 4 ஆண்டுகாலத்தில், இந்த இலக்கு நனவாக்கப்பட்டது.
ஷென்யாங் நகரம், காற்று மாசுபாட்டின் கட்டுப்பாட்டை முக்கியமாகக் மேற்கொண்டு, எரியாற்றல் மற்றும் பல்வகை தொழில்களின் கட்டமைப்பை சரிப்படுத்தியது என்று ஷென்யாங் நகராட்சித் துணைத் தலைவர் xingkai அறிமுகப்படுத்தினார். அவர் மேலும் கூறியதாவது,
புறநகரப் பகுதியில் தொழிற்துறையை வளர்க்கும் 11 சிறப்புப் பிரதேசங்களை நிறுவினோம். ஆண்டுதோறும் பல தொழில் நிறுவனங்கள் நகர்புறத்திலிருந்து புறநகரங்களுக்கு வெளியேறுகின்றன. இப்போது, நகர்புறத்தில், சேவை துறையை மையமாக கொண்ட புதிய தொழிற்துறை உருவாகியுள்ளது. அதே வேளை, கிழக்கில் உயிரினச் சுற்றுச்சூழல் சுற்றுலா பிரதேசமும், தெற்கில் உயர் தொழில்நுட்ப தொழில் பிரதேசமும், மேற்கில் சாதன உற்பத்தித் தொழில் பிரதேசமும், வடக்கில் வேளாண் பொருள் பதனீட்டு பிரதேசமும் அடங்கும் கட்டமைப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதை தவிர, நகரின் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தையும் ஷென்யாங் நகரம் வலுப்படுத்தி, குளிர்காலத்தில் ஒருங்கிணைப்பாக வெப்ப வாயுவை வினியோகிக்கின்றது. இதன் மூலம் பன்முகங்களிலும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தியது.
குறிப்பாக, இந்நகரில் கனரகத் தொழிற்துறை நிறுவனங்கள் குவிந்துள்ள tie xi பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் நல்ல பயன் பெற்று சர்வதேச கவனத்தை ஈர்த்தன. 2008ம் ஆண்டில், உலகில் வசிப்பதற்கு உகந்த நகரப் பிரதேசம் என்ற பரிசை, ஐ.நா இப்பிரதேசத்திற்கு வழங்கியது என்று குறிப்பிடத்தக்கது.
புதிய தரவுகளின்படி, 2008ம் ஆண்டில் ஷென்யாங் நகரின் காற்றும் தரம் சீரான வரையறைக்கு உகந்த நாட்களின் எண்ணிக்கை, 323ஆக அதிகரித்தது. அது, 2001ம் ஆண்டில் இருந்ததை விட ஒரு மடங்கு அதிகமாகும். அங்குள்ள காற்று தரம் முற்றிலும் மேம்பட்டுள்ளது.
ஷென் யாங் நகரம் போல், லியாவ் நிங் மாநிலத்தின் ஆன் ஷான் நகரமும், காற்று மாசுபாட்டை முழு முயற்சியுடன் கட்டுப்படுத்தி வருகிறது. இந்நகரில் மாசுபொருட்கள், முக்கியமாக ஆன்ஷான் இரும்புருக்கு தொழில் நிறுவனத்திலிருந்து வருகின்றன. 26 சதுர கிலோமீட்டர் பரப்புடைய தொழில்நிறுவனத்தினால், ஆன் ஷான் நகரம், 3 பக்கத்தில் சுரங்க மலைகளால் சூழப்பட்டது. இப்பிரச்சினையை தீர்க்க, ஆன்ஷான் இரும்புருக்கு தொழில்நிறுவனம் பொறுப்பு உணர்வை வலுப்படுத்தி, தொழில்நுட்ப மேம்பாட்டை விரைவுப்படுத்தியது. மேலும், அதிக எரியாற்றலை செலவிட்டு அதிக மாசுப்பொருட்களை வெளியேற்றுகின்ற இயந்திரங்களையும் அது அகற்றியது. இத்தொழில்நிறுவனத்தின் மேலாளர் yaolin கூறியதாவது,
சொந்த அறிவுசார் சொத்துரிமையுடைய நவீன உற்பத்தி சாதனங்களை கொண்டுள்ளோம். இதனால் எரியாற்றல் செலவு, பொருள் செலவு, பல்வகை மாசுபொருட்களின் வெளியேற்றம் ஆகியவை பெரிதும் குறைந்துள்ளன என்று அவர் கூறினார்.
மாசுபாடு குறைவான இரும்புருக்கு தொழில்நிறுவனமாக மாறுவது, அதன் தற்போதைய இலக்காகும். மாசுப்பாட்டில்லாத தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் பயன்பாடு மூலம், இந்நிறுவனம் எரியாற்றலின் சுழற்சி விகிதத்தை உயர்த்து வருகிறது. உற்பத்தி முறை, தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. மாசுபொருட்களின் வெளியேற்றம் தெளிவாக குறைந்துள்ளது.
மேற்கூறிய ஷென்யாங் மற்றும் ஆன்ஷான் நகரங்களை போல், லியாவ் நிங் மாநிலத்தின் fushun நகரமும், நூறு ஆண்டு கால வரலாறுடைய தொழிற்துறை நகரமாகும். முன்பு, இங்குள்ள தொழிற்துறை பிரதேசம், வாழ்க்கை, வணிகம் மற்றும் பண்பாட்டுப் பிரதேசங்களுடன் கலந்து அமைகின்றது. காற்று மாசுபாடு, நகரத்தின் வளர்ச்சியிலான மிக பெரிய தடையாக உள்ளது. இந்நிலைமையை மாற்ற, fushun நகர அரசு, நகரத்தின் ஒழுங்குகமைவை சரிப்படுத்தியது. தவிரவும், சுற்றுச்சூழல் கண்காணிப்பையும் வலுப்படுத்தியது. இதன் மூலம் மாசுப்பாட்டுக் குறைப்புப் பணியின் பலன்கள் நிலைநிறுத்தப்படுள்ளன. அது பற்றி fushun நகராட்சி துணைத் தலைவர் xi kelu கூறியதாவது,
மாசுபாடு மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க, சுற்றுச்சூழல் கண்காணிப்பை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம். காற்று மாசுப்பாட்டு ஊற்று மூலத்தை கண்காணிக்கின்ற 15 சாதனங்கள் fushun நகரில் பொருத்தப்பட்டன. கழிவுப்பொருட்களை அதிகமாக வெளியேற்றுகின்ற தொழி்ல்நிறுவனங்கள் மீது இணையம் மூலம் சோதனை செய்கிறோம். சுற்றுச்சூழல் சாதனங்களின் வரையறைக்கு உகந்ததாகவும் நிதானமாகவும் இயங்குவதற்கு இது உத்தரவாதமளிக்கலாம். தவிர, பின்தாங்கிய இயந்திரங்களை காலதாமதமின்றி அகற்றுகிறோம். இதுவரை 7 மின்சார உற்பத்தி இயந்திரங்களை அகற்றினோம் என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தில் லியாவ் நிங் மாநிலத்தின் தொடர்புடைய வாரியங்கள், மாசுபாட்டின் ஊற்றைக் கட்டுப்படுத்துவதை மையமாக கொள்ளும். அவை, சுழற்சி பொருளாதார மற்றும் தூய்மையான உற்பத்தியை செயல்படுத்தி கட்டுப்பாட்டு பணியின் வெற்றியை பலப்படுத்தி வருகின்றன. இதன் மூலம், மேலதிக நகரங்களின் காற்று தரம் மேம்படும்.
|