• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-20 09:49:06    
96வது பிரான்ஸ் சுற்று மிதிவண்டி போட்டி

cri
9ம் நாள் விடியற்காலை, 2009ம் ஆண்டு 96வது பிரான்ஸ் சுற்று மிதிவண்டி போட்டியின் 5வது கட்டப்போட்டி முடிவடைந்தது. லு காப் தக்தெ நகரிலிருந்து, பெர்பிக்நன்னுக்கான 5வது கட்டப்போட்டியின் நீளம் 196.5 கிலோமீட்டராகும். பிரான்ஸ் BBOX BOUYGUES தொலைத் தொடர்பு நிறுவன அணியின் வீரர் வோக்லெர், 4 மணி 29 நிமிடம் 35 வினாடி என்ற சாதனையில், சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த கட்டப்போட்டியின் சாம்பியன் பட்டம் அவர் பெறுவது இதுவே முதன்முறையாகும்.

பொது தரவரிசையில், ஸ்விட்சர்லாந்து வீரர் கன்செலாரா, முதலிடத்தில் தற்காலிகமாக உள்ளார். புகழ்பெற்ற அமெரிக்க வீரர் அர்ம்ஸ்தரொன் 2வது இடம் வகிக்கிறார்.
9ம் நாள் 6வது கட்டப்போட்டி முடிவடைந்தது. ஸ்பெயின் கெரோனெயிலிருந்து, பார்செலோனெக்கான 6வது கட்டபோட்டியின் நீளம் 181.5 கிலோமீட்டராகும். ஸ்விட்சர்லாந்து செர்வெலொ அணியின் நார்வே வீரர் ஹாஸ்ஹோவ்த் சாம்பியன்பட்டம் பெற்றார். பொது தரவரிசையில் ஸ்விட்சர்லாந்து வீரர் கன்செலாரா, முடலியத்தில் தொடர்ந்து முடலிடம் வகிக்கின்றார். புகழ்பெற்ற அமெரிக்க வீரர் அர்ம்ஸ்தரொன் தொடர்ந்து 2வது இடத்தை வகிக்கிறார்.

நெதர்லாந்து ஊனமுற்றோர் நான்கு பேர், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி, சீனாவின் லாசா நகரிலிருந்து புறப்பட்டு, இமய மலையை கடந்து ஜுலை 8ம் நாள் நேபாள தலைநகர் காட்மாண்டுவை அடைந்தனர். அவர்கள் 15 நாட்களில் 950 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டனர். நேபாள சுற்றுலா ஆணையம், 9ம் நாள் இந்த 4 ஊனமுற்றோரும், கலந்து கொண்ட செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. உலக வரலாற்றில், ஊனமுற்றோர், சக்கர நாற்காலியை பயன்படுத்தி, சீனாவிலிருந்து இமய மலையை கடந்து, நேபாளத்துக்கு சென்றடைந்தது, இதுவே முதன்முறை என்று நேபாள சுற்றுலா ஆணையம் தெரிவித்தது.

புகழ்பெற்ற அமெரிக்க நீச்சல் வீரர் மிஷேல் ஃபிலிப்ஸ் புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளார். 9ம் நாள் நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன் பட்டப்போட்டிக்கான அமெரிக்க தேர்வு போட்டியில், அவர் 50.22 வினாடிகளில் சாதனையை உருவாக்கி, வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் போட்டியின் உலக சாதனையை முறியடித்தார்.
பெய்ஜிங் நேரப்படி, 10ம் நாள் விடியற்காலை, இவ்வாண்டில் REAL MADRID கால்பந்து மன்றத்தின் 4வது புதிய வீரரான, பிரான்ஸ் வீரர் காரிம் பேன்செமா REAL MADRID கால்பந்து மன்றத்தின் விளையாட்டரங்கில் ரசிகர்களை சந்தித்தார். மன்ற அதிகாரியுடன் செய்தியாளர் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.