• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-21 14:25:43    
ஹுவாங்ஷான் மலையில் சுற்றுலா வழிக்காட்டி (ஆ)

cri

ஹுவாங்ஷான் மலையின் யூப்பிங் காட்சிப் பிரதேசம், ஹுவாங்ஷான் மலையில் ஒரு புகழ்பெற்ற காட்சிப் பிரதேசமாகும். அது, யூப்பிங் மாளிகையை மையமாகக் கொள்கிறது. தாமரை மலைமுகடு மற்றும் தியன்தூ மலைமுகடு இப்பிரதேசத்தின் முக்கியப் பகுதிகளாகும். இங்கு, பேங்லாய் மூன்று தீவுகள், ஆவ்யூ குகை உள்ளிட்ட அரிய காட்சிகள் இடம்பெறுகின்றன.

யூப்பிங் மாளிகை, தியன்தூ மலைமுகட்டிற்கும் தாமரை மலைமுகட்டிற்கு இடையில் இருக்கிறது. இங்கு, ஹுவாங்ஷான் மலையின் சுமார் அனைத்து அரிய காட்சிகளும் இடம்பெறுகின்றன. அதனால், இப்பிரதேசம், ஹுவாங்ஷான் மலையின் மிக அழகான இடம் என அழைக்கப்படுகிறது. அதற்குப் பின், யூப்பின் மலைமுகடு காணப்படுகிறது.

தியன்தூ மலைமுகடு, யூப்பிங் மலைமுகட்டின் தெற்குப் பகுதியில் உள்ளது. அவற்றுக்கு இடையில், ஒரு கிலோமீட்டார் தூரம். தியன்தூ மலைமுகடு, ஹுவாங்ஷான் மலையின் பெரிய மலைமுகடுகளில் மிக அபாய இடமாகும். அதன் உயரம், 1830 மீட்டராகும்.

தாமரை மலைமுகடு, யூப்பிங் மாளிகையின் வடக்குப் பகுதியில் உள்ளது. அது, ஹுவாங்ஷான் மலையின் மிக உயரமான மலைமுகடாகும். அதன் உயரம், 1864 மீட்டராகும். அது, மலர்ந்த தாமரை போல் காட்சியளிக்கிறது. அதனால், தாமரை மலைமுகடு என அழைக்கப்படுகிறது.

தாமரை மலைமுகட்டின் கீழ், ஆவ்யூ மலைமுகடு இடம்பெறுகிறது. அதன் உயரம், 1780 மீட்டராகும். அதற்குப் பின்புறத்தில், தியன்ஹாய் இருக்கிறது. அது, மலையிலுள்ள வடிநிலம் ஆகும். இங்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அரிதாகக் கண்ட தாவரங்கள் வளர்ந்து வருகின்றன.