• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-21 14:42:41    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை அன்பான நேயர்களே!நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
தமிழன்பன் உங்கள் கருத்து கடிதங்களின் தொகுப்பாய் அமையும் இந்நிகழ்ச்சியில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு பற்றிய உங்கள் கருத்துக்களை அனைவரும் அறிய தருகின்றோம்.
கலை நவ சீனா வைரவிழா பொது அறிவுப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உடனடியாக விடைகளை அனுப்பி போட்டியில் பங்கேற்பை நினைவூட்டிக் கொள்கின்றோம்.
தமிழன்பன் நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஒலிப்பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கருத்துகளை கேட்போம்
கடிதப்பகுதி
கலை நீலகிரி கீழ்குந்தா கே.கே. போஜன் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். பறவைக்காய்சச்ல் பற்றிய கட்டுரை பல்வேறு தகவல்களை தருவதாக அமைந்தது. இது இளம்வயதினர் குறிப்பாக 18 முதலட 20 வயதினரை அதிகம் தாக்கும் என்றும் ஒரு வாரத்தில் துல்லியமான பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாமட் என்றும் அறிந்து கொண்டேன். சத்தன உணவை உண்டும், சுகாதாரமாகவும் வாழ்ந்து வந்தால் இந்நோயின் பாதிப்பு குறையும் என்பது ஆறுதலான செய்தி. பறவை வகை இறச்சியை நன்கு வேகவைத்து சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டம் என்றும் அறிவுறுத்தியது நன்று.
தமிழன்பன் நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி சென்னை எஸ் ரேணுகா தேவி எழுதிய கடிதம். நட்புப் பாலம் நிகழ்ச்சி திங்கள்தோறுமு் வலம் வருகிறது. பொது அறிவுப் போட்டியில் வெற்றி பெற்று சீனாவில் பயணம் மேற்கொணடவர்கள், அவர்களின் சீன அனுபவங்கள் என நேயர்களின் பரிமாற்ற மேடையாக இந்யத நிகழ்ச்சி உள்ளது. பகுதி பகுதியாக இந்த நிகழ்ச்சியை வழங்குவது அத்ன தொடர்ச்சியை அடுத்த வாரம் கேட்க தூண்டும் விதத்தில் ஆவர்ம் மேலிடச் செய்கிறது. சிலவேளைகளில் ஒலிப்பதிவின் தரம் சரியாக இல்லை. அதனை சரிசெய்தால் இந்நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.


கலை எஸ்.ரேணுகா தேவி நீங்கள் அளித்த முன்மொழிவுக்கு நன்றி. தொலைபேசி மற்றும் செல்லிடபேசி வழியாக பதிவு செய்யப்பட்ட பதிவுகளால் இந்த நிகழ்ச்சிகள் அமைவதால் சிலவேளை ஒலிப்பதிவின் தரம் குறைய வாய்பபுள்ளது. எதிர்காலத்தில் தரமான ஒலிப்பதிவை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வொம் என்று தெரிவித்து கொள்கிறோம். சுட்டும் விழிச் சுடரே என்ற அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி துரையூர் குறிஞ்சி குமரன் அனுப்பிய கடிதம். கண்பார்வை பற்றிய இன்றைய நிகழ்ச்சி சிறப்பான கட்டுரையாக விரிந்தது. அருகிலுள்ள பொருட்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் தூரப்பார்வை வளராமல் இருக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதை இதன் மூலம் அறிய முடிந்தது. கணினி, தொலைக்காட்சி பயன்பாடுகளை குறைத்து கொள்வது கண்பார்வைக்கு நல்லது என்றும் தெரிய வைத்தார். வெளியிடங்களில் விளையாடும் விளையாட்டுகள் முன்பு அதிகமாக இருந்ததால் இக்கால மக்களுக்கு தூரப்பார்வை வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தததையும் அறிந்தேன்.
தமிழன்பன் கடையாலுருட்டி எம்.பிச்சைமணி சீன மகளிர் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். தேவதை இல்லம் குறித்தும், அங்குள்ள மனவளர்ச்சி குன்றியோரின் நல்வாழ்வுக்காக வாழும் வாங்ப்போ அம்மையாரின் குறித்தும் அறிய வந்தேன். அவர் குழந்தைகளை போன்ற அவர்களிடத்தில் பழகும்விதம் பற்றியும் இந்த மனவளர்ச்சி குன்றியோரை கண்காணிப்பதற்காக உயர்கல்வி வேலையை கைவிட்டதையும் தெரிந்து கொண்டேன். அந்த அம்மையாரின் சேவை மனப்பான்மை உன்னதாமானது. எதிர்காலத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள இவருடைய கனவு நிச்சயம் நிறைவேறும்.


கலை நந்தியாலயம் T.தணிகாசலம் செய்தி தொகுப்பு பற்றிய எழுதிய கடிதம். தமிழ் நாட்டில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 6 ஆம் நாள் 2000 நபர்களின் முன்னிலையில் சீன மொழி கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய சீன தூதரக அதிகாரிகள், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு. விஸ்வநாதன் ஆகியோர் இதன் தொடக்கவிழாவில் கலந்து கொண்டனர். இதன் மூலம் அதிக தமிழர்கள் சீன மொழிக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நந்தியாலத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கப்பட்டுள்ளதை சீன வானொலியின் மூலம் அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
தமிழன்பன் சென்னை அப்துல் காதர் விளையாட்டு செய்திகள் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீன தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல போட்டிகளில் தொடர்ந்"து வெற்றி வாகை சூடி பாதக்கங்களை குவித்து வருவதை கேட்கும் போது மகிழ்ச்சியடைகின்றோம். 2010 உலக கால்பந்து போட்டி ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. அது பற்றிய தகவல்களும் அருமையாக இருந்தன.
கலை கினிகத்தேனை எஸ்வி. துரைராஜா மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். மக்களின் மத சுதந்திரத்தை பேணிமதிக்கும் வகையில் வழிபாட்டு தலங்களை கட்டும் திட்டப்பணிகளில் பெய்ஜிங் மாநகரம் ஈடுபட்டுள்ள்தை மலர்ச்சோலை நிகழ்ச்சியில் கேட்டேன். 12 தேவாலையங்களையும், இரண்டு மசூதிகளையும் கட்டுகின்ற திட்டப்பணிகள் பிற சமய வழிபாடுகளுக்கு வசதி ஏற்படுத்தும். இது பெய்ஜிங்கில் சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டவரின் மத வழிபாடுகளுக்கு வசதிகளை ஏற்படுத்தும்.


மின்னஞ்சல் பகுதி
புதுக்கோட்டை, G. வரதராசன்
போதைப்பொருட்கள் மனிதகுலத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கின்றன. இது சர்வதேச பிரச்னையாக மாறியுள்ள இத்தருணத்தில் சீனா எடுத்து வருகின்ற துடிப்பான நடவடிக்கைகள் பார் புகழும் வண்ணம் இருக்கின்றது. சீனாவில் மக்கள் கலந்துக் கொள்ளும் பொது இடங்கள், கட்சிக்குழுக் கூட்டங்கள் என பல இடங்களில் பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் விழப்புணர்வை தூண்டும் வகையில் அரசு செயல்படுவது பாராட்டத்தக்கது. இப்பணியில் ஒரு லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. போதைப்பொருள் உட்கொள்வதை தடுப்பது போதைப்பொருட்களை தடைசெய்யும் பணியில் ஒரு பகுதி மட்டுமே. சட்டங்கள் செயல்பாடுகள், விழிப்புணர்வு நடவடிக்கை என போதைப்பொருள் தடுப்பை சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சியாக மேற்கொள்வது சீனாவின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்ககையின் சிறப்பாகும்.
மதுரை அண்ணாநகர், N. இராமசாமி
அன்மையில் புதியமருத்துவ அமைப்புமுறை சீர்திருத்தத்தை சீனா அரசு மேற்கொண்டதை சீன வானொலி தமிழ் ஒலிப்பரப்பு மூலம் தெரிந்து கொண்டேன். சீனநடுவன் அரசு சீனமக்களின் மருந்துவச் செலவை குறைக்கும் நோக்கத்தோடு 85ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மருத்துவம் மற்றும் அடிபடை சுகாதார வசதி கட்டுமானதை அதிகரித்து மக்களின் மருத்துவ சிகிச்சையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துவருவது சீன அரசின் மக்கள் மைய மனப்பான்மையை சுட்டுகிறது.


பாண்டிச்சேரி, N. பாலகுமார்
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மூலம் நாள்தோறும் திரு. செல்வம் அவர்களின் திபெத் சுற்றுப்பயண அனுபவங்களை கேட்டு வருகிறேன். அவர் சுற்றிப்பார்க்கும் இடங்களின் சிறப்பை மிகவும் தெளிவாக கூறி வருவது, நாங்களும் உடன் சுற்றுப்பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அவர் போதலா மாளிகையின் சிறப்பையும், அதனை வியப்புடன் கண்டு ரசித்ததையும் விளக்கியதை கேட்டேன். திபெத்தின் தனிச்சிறப்பை எடுத்துக்காட்டு வகையில் உள்ள போதலா மாளிகையை ரசிக்க இரண்டு கண்கள் போதாது. அதில் உள்ள ஒவ்வொரு அறையும், எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும், 1300 ஆண்டு பழமை வாய்ந்த இந்த மாளிகை, உண்மையிலேயே உலக அதிசயங்களில் ஒன்றாக இல்லாவிட்டாலும், உலக மரபு செல்வங்களில் ஒன்றாக இடம்பெற்று இருப்பது சிறப்பாகும்.
சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி
ஜூன் திங்களில் இரு விமான விபத்துக்களில் 480 பேர் உயிரிழந்துள்ளதால் இனியப்பயணமாக எல்லோராலும் விரும்பப்பட்ட விமானப் பயணம் கசப்பானதாகவும், அபாயகரமானதாகலும் மாறிவரும் சூழ்நிலை தென்படுகின்றன. இந்நிலையை மாற்ற பயணியர் சேவை விமான நிறுவணங்கள் இலாபத்தை மற்றும் குறிக்கோளாக கொள்ளமால் பயணிகளின் பாதுகாப்பை முக்கியமாக கொண்டு செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான பிரச்சனைகளை ஆராய்ந்து, சிக்கல்களை களைய சீரிய முயற்சிகளை உடனடியாக விமான எடுக்கவேண்டிய தருணம் இது.


மீனாட்சிபாளையம் கா.அருண்
அருமையான திபெத் பொது அறிவுப்போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற நேயர்களின் பரிசளிப்பு விழா திபெத்தில் நடைபெற்றதன் விவரத்தையும், பரிசு பெற்ற நேயர்கள் தெரிவித்த கருத்துக்களையும் செய்திதொகுப்பில் வழங்கினீர்கள். இதில் தமிழ் மொழிப்பிரிவு நேயரான திரு S.செல்வத்தின் கருத்தை குறிப்பாக சேர்த்திருந்தது சிறப்பு, நேபாள அரசு உயர் அதிகாரி ஒரு சீன வானொலி சிறப்பு பரிசு பெற்ற நேயராக பயணம் மேற்கொண்டிருப்பது வியப்புத்தந்தது. மேலும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் கவிசெங்குட்டுவன் அவர்களின் திபெத் பற்றிய பல கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களை கலையரசி அவர்களும் கிளீட்டஸ் அவர்களும் வழங்கினார்கள், திபெத் பற்றி இதுவரை அறிந்திராத பல தகவல்களை இதன் மூலம் அறியமுடிந்தது.
பாகிஸ்தானிலிருந்து Rafiullah Mandokhai
சீன வானொலியின் அருமையான நிகழ்ச்சிகள் அனைத்தும் திருப்பதிகரமாக அமைந்துள்ளன. சீன வானொலி தமிழ்ப்பிரிவின் பணியாளர்களை நினைத்து பெருமையடைகின்றேன். நேயர்களின் கடிதங்களுக்கு உடனடியாக பதில் அனுப்புவதில் சீனா வானொலியை பாராட்ட வேண்டும். இவ்வாறு உடனடியாக தொடர்பு கொள்வது தான், மீண்டும் மீண்டும் சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்க தூண்டுகிறது. இந்நிகழ்ச்சிகளை சிற்றலை வானொலி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கேட்டு வருகிறேன். சீன வானொலி நிலையம் நட்புணர்வோடு வழங்கும் நிகழ்ச்சிகளாலும், நேயர்களிடம் காட்டும் தோழமை உணர்வாலும் ஒவ்வொரு நாளும் சீன வானொலி கேட்க தூண்டப்படுகின்றோம்.


உத்திரக்குடி, சு. கலைவாணன் ராதிகா
சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி, மலைப்பகுதியில் பிறந்து உலக புகழ் பெற்ற லோயுங்பு அவர்களின் இலட்சிய குறிக்கோளை பதிவு செய்தது. பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் சாதனை புரிந்து, போஆவ் ஆசிய மன்றத்தின் தலைமை செயலாள் பதவி வரை உயர்ந்துள்ளது மகிழ்ச்சி தந்தது. உலகிற்கான அவரது சேவை தொடரட்டும்.