• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-22 09:53:00    
கறுப்பு ஆடை கன்னி

cri
ச்சின் வம்சக்காலத்தில் ஜியாங்சு மாநிலத்தில் ஒரு மாவட்ட அரச அதிகாரியாக இருந்தவர் ட்சூ. ஒருமுறை அவருக்கு நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கிற்கு பேரளவு பணத்தை கொண்டு சென்று ஒப்படைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜியாங்சுவிலிருந்து தலைநகரான பெய்ஜிங் செல்ல அப்போது பல நாட்கள் பிடிக்கும். வழியில் பல இடங்களை கடந்து செல்லவேண்டும், பல இடங்களில் தங்கிச் செல்லவேண்டும். இவற்றில் ஷாந்துங் மாநிலத்தை சேர்ந்த லிங்ச்சிங் புறநகரப்பகுதியும் ஒன்று. இந்த லிங்ச்சிங், கொள்ளையர்களுக்கு பெயர் போனது.
ஆக, பேரளவு பணத்தை சுமந்த வண்டிகளோடு தலைநகரம் செல்லும் வழியே ட்சூ லிங்ச்சிங்கில் தங்க நேரிட்டது. அந்த சிறிய நகரில் இருந்த ஒரேயொரு விடுதியில் அவர் இரவு தங்க முடிவெடுத்தார். அப்போது சில பெண்கள் விடுதிக்கு வந்து அவருக்காக பாடல் பாடி மகிழ்விக்க முன்வந்தனர். உண்மையில் அவர்கள் கேளிக்கை மகளிர், பாலியல் தொழிலாளர்கள். அக்காலத்தில், பாடல்களை பாடி குறிப்பிட்ட நபரை கவர்ந்து, அந்த நபர் விரும்பினால், உடன் சென்று, அவர்களை மகிழ்விப்பது, தொழில் நடைமுறையாக இருந்தது. நாட்டின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் இந்த பெண்கள் பாதியளவே பணத்தை பெற்றார்கள் என்பது ஒருபுறம் ஆனால் அதற்கு மாற்றாக உடனிருக்கும் நபர் பற்றிய விபரங்களை, அவர்கள் கொண்டு வந்துள்ள பொருட்கள் பற்றிய தகவல்களை இந்த பெண்கள் உள்ளூர் கொள்ளையரிடம் சொல்லிவிடுவார்கள் என்பது மறுபுறம்.
பயண அனுபவங்கள் அதிகம் கொண்ட அதிகாரி ட்சூ இந்த லிங்ச்சிங் பற்றியும், இங்கு நடைபெறும் கொள்ளைகள் பற்றியும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார். ஆக, இந்த பெண்கள், கறுப்பு உடை உடுத்திய பெண் ஒருத்தியின் கண் அசைவுகள் மற்றும் சைகைகளுக்கு இணங்க செயல் பட்டதை கண்ட ட்சூ, அவள்தான் இந்த பெண்களின் தலைவி என்று புரிந்துகொண்டார்.