• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-22 14:57:12    
லெபோகின் கட்டிடம் விருது

cri
2009ம் ஆண்டு பிரிட்டன் ரோயல் கட்டிடம் சற்பி சங்கத்தின் லெபோகின் கட்டிடம் விருதுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. பெய்சிங்கில் அமைந்துள்ள சீனத் தேசிய விளையாட்டு அரங்கான பறவைக் கூட்டு இவ்விருது வழங்கப்படும் என்று பிரிட்டன் செய்தி ஊடகங்கள் அறிவித்தன.
தவிர, லெபோகின் கட்டிடம் விருதாக பெய்சிங் சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையம், பெய்சிங் நீர் கன சதுரம் ஆகிய கட்டிடங்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

பொது மக்களுக்கு இயன்ற அளவில் நுழைவுச்சீட்டுகளை விற்பனை செய்த கோரிக்கையின் படி, 11வது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டியின் நுழைவுச்சீட்டுகள் விரைவாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் விற்கப்படும். 11வது தேசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழு நடத்திய செய்தியாளர் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.
11வது தேசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் சீனாவின் சாங் தூங் மாநிலத்தின் விளையாட்டு குலுக்கல் நிர்வாக மையம் இப்போட்டியின் நுழைவுச்சீட்டுகளை சிறப்பாக விற்பனை செய்யும் உரிமை பெற்றது. செப்டம்பர் திங்கள், நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்படும் என்று அறியப்படுகின்றது.

ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளின் பாதுகாப்பை பேணிக்காத்து, பயங்கரவாதத் தாக்குதலை தவிர்க்கும் வகையில், இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் குழு 3 கோடியே 14 இலட்சம் பாங்ஸ் முதலீடு செய்தது என்று பிரிட்டன் செய்தி ஊடகம் 21ம் நாள் அறிவித்தது.
ஒலிம்பிக் பூங்காவின் தொடர்புடைய வசதிகளை மேம்படுத்துவதில் இந்த நிதி முக்கிமாக பயன்படுத்தப்படும். பயங்கரவாதத் தாக்குதலை தவிர்க்கும் வகையில், மேலும் அதிக பாதுகாப்பு சாதனங்களை பொருத்துவதில் இது பயன்படுத்தப்படும் என்று அறியப்படுகின்றது.

2010ம் ஆண்டு உலக மகளிர் வாவிபால் சாம்பியன்பட்ட போட்டியின் ஐரோப்பிய பிரதேச தேர்வாட்டம் 20ம் நாள் முடிவடைந்தது. இத்தாலி, செக் குடியரசு, செர்பியா, கிரோஷியா, துருக்கி, போலந்து, ஜெர்மனி, ஹோலந்து ஆகிய 8 அணிகள் 2010ம் ஆண்டு உலக மகளிர் வாவிபாவ் சாம்பியன் போட்டியில் கலந்துகொள்ளும் தருதியை பெற்றுள்ளன. கடந்த உலக மகளிர் வாவிபால் சாம்பியன் போட்டியின் முதலிடத்தை பெற்ற ரஷிய அணி அடுத்த இறுதி போட்டியில் நேரடியாக நுழையும். இதனால் அடுத்த ஆண்டு உலக மகளிர் வாவிபால் சாம்பியன் போட்டியில் 9 ஐரோப்பிய அணிகள் கலந்துகொள்ளும்.