
பூங்காவின் நடைப்பாதைகள் ஒத்துக்காணப்படவில்லை இப்பூங்காவின் நுழைவாயிலில் உள்ள நடைப்பாதை ஜல்லி கல்லால் ஆனது. ஆனால், மலையில் ஏறினால், ஒழுங்கான தெப்பம் காணப்படுகின்றது. தொடர்ந்து சென்றால், வளைவு சுளிவான நடைப்பாதை பெரிய கற்பாதையாக மாறுகிறது. சுற்றுலாவின் போது, எழில் மிக்க வனக் காட்சியையும் கம்பீரமான மலையையும் பயணிகள் கண்டுகளிக்கலாம். தவிர, தெப்பம், கற்பாதை ஆகியவை, பயணிகளின் காலைத் தொடுவது போன்ற உணர்வு ஏற்படலாம்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மே திங்களில், மலையில் பல்வகை மலர்கள் அழகாக காட்சி அளிக்கின்றன. செந்நிற மலர்கள் நெருப்பு போலவும் வெண்ணிற மலர் உறைபனி போலவும், இளம் செந்நிற மலர்கள் அந்திப்பொழுது சூரிய ஒளி போலவும் காணப்படுகின்றன. இங்குள்ள மலர்களும் மலர்ச்செடிகளின் இலைகளும் மிக மிக அழகானவை என்று வழிகாட்டி கொங்சியெமெய் கூறினார். இப்பூங்காவில், அழிவின் விளிம்பில் உள்ள வேங்கர் எனும் அரிய தாவரம் வளர்கின்றது. இது, அரசு நிலையிலான பாதுகாப்பு தாவரமாகும். பறக்கும் பறவை போன்ற வடிவத்திலான அதன் மலர், வெண்ணிறமுடையது. டைனோசர் காலத்தில் தோன்றியதன் காரணமாக, இத்தாவரம் மதிப்பு மிக்கது.
|