• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-23 11:07:58    
உலகப் பொருட்காட்சியில் அமைய போகின்ற புத்தாக்க அரங்குகள்

cri

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 2010ம் ஆண்டு மே திங்கள் முதல் நாள் ஷாங்காய் மாநகரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கும். இன்றைய நிகழ்ச்சியில், இந்த உலகப் பொருட்காட்சியில் அமைய போகின்ற புத்தாக்க அரங்குகளையும், நடைபெற போகின்ற தலைச்சிறந்த கலை நிகழ்ச்சிகளையும் முன்கூட்டியே பார்த்து ரசிக்கலாமா?வாருங்கள்!
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவில், நிரந்தர கட்டிடங்களைத் தவிர, ஏளாரமான தற்காலிக கட்டிடங்கள் இடம்பெறுகின்றன. வழக்கம் போல, உலகப் பொருட்காட்சி

நிறைவடைந்த பின், அந்தத் தற்காலிக கட்டிடங்கள் அழிக்கப்படும். இவ்வாறு அகற்றப்படுவது மனவருந்தம் தந்தாலும், இந்த அரங்குகளின் புத்தாக்க கருத்துகள், 6 திங்கள் காலத்தின் கண்காட்சி மூலம், மக்களின் மனத்தில் ஆழப்பதியும் என்பதில் ஐயமில்லை.
முதலில், பிரிட்டனின் அரங்கைப் பார்க்க செல்கின்றோம். ஆறு மாடிகளைக் கொண்டு, 6 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவான இக்கண்காட்சியகம், பிரிட்டன் மக்கள் சீன மக்களுக்கு வழங்கிய சிறப்பான அன்பளிப்பாகும். அதன் வெளி தோற்றம், கண்ணாடியைப் பயன்படுத்தி தயாரித்த 8 மீட்டர் நீளமான ஆக்டோபஸிலுள்ள உணர்வறியும் கால்கள் போன்ற 70 ஆயிரம் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிறிய காற்றிலும் இவை அசைந்தாடி கொண்டிருக்கும். இது, உயிராற்றல் மிக்க அரங்கமாக இருப்பதை, மக்கள் உணர்ந்துகொள்கின்றனர். இரவு நேரத்தில், பிரிட்டன் அரங்கு, அற்புதமான காட்சியை வெளிப்படுத்தும். பிரிட்டன் தரப்பின் பணியாளர் Carma Elliot அம்மையார் அறிமுகப்படுத்தியதாவது:
ஆக்டோபஸிலுள்ள உணர்வறியும் கால்கள் போன்ற வடிவமைப்புகள் இரவில் வண்ண விளக்குகளால் மின்னுங்கின்றன. இதைப் பார்க்கும் போது, ஒளிர்கின்ற உயிருள்ள உறுப்புகள் போல அவை தோன்றும். எங்களின் முன்னால், உயிராக போன்றது. என்னுடைய அரங்கம், ஆற்றின் கரையில் அமைந்ததால், ஹுவாங்புஃ ஆற்றின் எதிர் பக்கத்திலிருந்து இதைப் பார்த்து இரசிக்கலாம் என்று அவர் கூறினார்.

புத்தாக்க அரங்கம் என்பது, பிரிட்டன் அரங்கின் தலைப்பாகும். அனைத்து பார்வையாளர்களும் அவசர அவசரமான நகரத்தில் அமைதியை அனுப்பவிக்கும் பெரிய மலர் தோட்டத்தை வழங்குவதை போன்ற உணர்வை இது வழங்க விரும்புகிறது. தவிர, David Beckham உள்ளிட்ட பிரிட்டனின் அதிக புகழ்பெற்ற பிரமுகர்களை அழைத்து, ஷாங்காய் மாநகருக்கு வந்து பிரிட்டன் பண்பாட்டைப் பரப்புரை செய்ய போவதாக, Carma Elliot அம்மையார் விருப்பம் தெரிவித்தார்.
நேயர்களே, 298 நாட்களுக்கு பின், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கவுள்ளது. அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் பண்பாட்டை இணைக்கும் இந்த பிரமாண்டமான பொருட்காட்சியைப் பார்த்து மகிழ, ஷாங்காய் மாநகருக்கு அனைவரும் வருவதை வரவேற்கின்றோம்.